இந்தியா

அரசின் கோரிக்கையை நிராகரித்தார் சோனியா காந்தி

செய்திப்பிரிவு

மத்திய அரசு நேற்று நடத்திய அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு முன்னதாக சோனியா காந்தி தலைமையில், காங்கிரஸ் நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சோனியா காந்தி பேசியதாவது: முறைகேடு களுக்கு பொறுப்பா னவர்கள் பதவியில் நீடிக்கும் வரை ஆக்கப் பூர்வ விவாதங்களுக்கோ, நாடாளுமன்ற நடைமுறை களுக்கோ இடமில்லை. வெளி யுறவு அமைச்சர் மற்றும் 2 முதல்வர்களுக்கு எதிராக சர்ச்சைக்கிடமில்லாத வலுவான ஆதாரங்கள் உள்ளன. இவர்கள் பதவி விலக பிரதமர் உத்தரவிட வேண்டும்.

பெரும்பான்மை இருப்பதால் இந்த அரசு பொறுப்புடன் நடந்துகொள்வதற்கு பதிலாக அராஜகத்துடன் செயல்படுகிறது. நாடாளுமன்றத்தை மீறி அவசர சட்டங்கள் பிறப்பிக்கப் படுகின்றன. விசாரணைக்கு உத்தரவிட வேண்டிய பிரச்சினை களை, தங்களுக்குள்ள பெரும் பான்மையை பயன்படுத்தி வெறும் விவாதத்துடன் முடிக்கப் பார்க்கின்றனர். இதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த அரசு பொறுப்பேற்கும் அரசாக இருக்க தேவையான அனைத்து முயற்சிகளும் எடுப்போம்.

பொறுப்புகளில் இருந்து தப்பித்துச் செல்ல நாடாளுமன்ற பெரும்பான்மை யாருக்கும் உரிமம் வழங்கவில்லை. அரசின் தவறுகளுக்கு எதிராக உரத்த குரல் எழுப்புவது எங்கள் கடமை. இது அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமை.

இவ்வாறு சோனியா காந்தி பேசினார்.

SCROLL FOR NEXT