கோப்புபடம் 
இந்தியா

அச்சுறுத்தும் கரோனா: இந்தியாவில் பாதிப்பு 9 ஆயிரத்தைக் கடந்தது; 300க்கும் மேல் பலி எண்ணிக்கை அதிகரிப்பு; மகாராஷ்டிராவில் தொடரும் சோகம்

பிடிஐ

இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும் 35 பேர் கரோனா வைரஸால் உயிரிழந்ததால் உயிரிழப்பு 308 ஆக அதிகரித்துள்ளது. 9,152 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் 7 ஆயிரத்து 987 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 856 பேர் கரோனா வைரஸிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

''மகாராஷ்டிர மாநிலத்தில் நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. அங்கு பலியானோர் எண்ணிக்கை 127 ஆக நேற்று இருந்த நிலையில், இன்று 149 ஆக அதிகரித்துள்ளது. அதாவது கடந்த 24 மணிநேரத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

அடுத்த இடத்தில் மத்தியப் பிரதேசத்தில் பலி எண்ணிக்கை 36 ஆக இருக்கிறது. மூன்றாவதாக குஜராத்தில் நேற்று 3 பேர் பலியானதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.

டெல்லியில் நேற்று 5 பேர் உயிரிழந்ததால், பலியானோர் எண்ணிக்கை 24ஆக அதிகரித்துள்ளது. பஞ்சாப், தமிழகத்தில் தலா 11 பேரும் உயிரிழந்துள்ளனர்.

தெலங்கானாவில் 9 பேரும், ஆந்திரா, மேற்கு வங்கத்தில் தலா 7 பேரும், கர்நாடகாவில் 6 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 5 பேரும், ஜம்மு காஷ்மீரில் 4 பேரும், ராஜஸ்தான், ஹரியாணாவில் தலா 3 பேரும், கேரளாவில் 2 பேரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

பிஹார், ஒடிசா, இமாச்சலப் பிரதேசம், ஜார்க்கண்ட், அசாம் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகபட்சமாக 1,985 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 217 பேர் குணமடைந்துள்ளனர். அதைத் தொடர்ந்து டெல்லியில் 1,154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 27 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் 1,043 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 50 பேர் குணமடைந்துள்ளனர். ராஜஸ்தானில் 804 பேரும், தெலங்கானாவில் 504 பேரும், கேரளாவில் 376 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தில் 483 பேரும், ஆந்திராவில் 427 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 564 பேரும், கர்நாடகாவில் 232 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தில் 516 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 245, மேற்கு வங்கத்தில் 152, பஞ்சாப்பில் 151, ஹரியாணாவில் 185, பிஹாரில் 64, அசாமில் 29, உத்தரகாண்ட்டில் 35, ஒடிசாவில் 54, சண்டிகரில் 21, சத்தீஸ்கரில் 31, லடாக்கில் 15 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்தமான் நிகோபர் தீவில் 11 பேர், கோவாவில் 7 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 32 பேர், புதுச்சேரியில் 7 பேர், ஜார்க்கண்டில் 19 பேர், மணிப்பூரில் 2 பேரும், மிசோரம், அருணாச்சலப் பிரதேசத்தில் தலா ஒருவர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்''.

இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT