இந்தியா

லாக்-டவுன் மீறல்: 10 அயல்நாட்டுக்காரர்களை 500 முறை  ஆங்கிலத்தில் ‘ஸாரி’ எழுத வைத்து தண்டனை

பிடிஐ

ரிஷிகேஷில் கரோனா வைரஸ் லாக்-டவுன் விதிகளை மீறிய 10 அயல்நாட்டுக் காரர்களை 500 முறை ‘ஸாரி’ என்று எழுத வைத்து போலீஸார் விநோத தண்டனை வழங்கினர்.

ரிஷிகேசம் தபோவனம் பகுதியில் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 10 அயல்நாட்டுக் காரர்கள் லாக் டவுன் உத்தரவுகளை மீறி வெளியே சுற்றித்திரிந்தனர்.

இவர்களைப் பிடித்த உதவி காவல் ஆய்வாளர் விநோத் குமார் ஷர்மா ஒவ்வொருவரையும் தனித்தனியாக ஸாரி ஸாரி என 500 முறை மன்னிப்பு என்று எழுத வைத்தார்.

அதாவது, “நான் லாக்டவுன் விதிகளை கடைப்பிடிக்கவில்லை, எனவே நான் மன்னிப்புக் கேட்கிறேன்” என்று ஒவ்வொருவரும் 500 முறை எழுத வைக்கப்பட்டனர்.

தபோவனப் பகுதியில் 500க்கும் மேற்பட்ட அயல்நாட்டினர் தங்கியுள்ளனர், இவர்களில் பலர் லாக்-டவுன் உத்தரவுகளை பலநாட்கள் மீறிவந்துள்ளனர், இதனையடுத்து இவர்களுக்கு பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால் எச்சரிக்கைகளைக் காற்றில் பறக்கவிட்டனர். இதனையடுத்து இந்தத் தண்டனை பலருக்கும் ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளதாக சப் இன்ஸ்பெக்டர் விநோத் குமார் ஷர்மா தெரிவித்தார்.

SCROLL FOR NEXT