அகமதாபாத்தில் 75 வயதான கரோனா வைரஸ் நோயாளி உயிரிழந்ததை அடுத்து குஜராத் மாநிலத்தில் கோவிட் 19 பலி எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளதாக மூத்த சுகாதார அதிகாரி ஒருவர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
உலகெங்கும் பெரும் பேரழிவுகளை ஏற்படுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவில் இதுவரை 8536 பேரை பாதித்துள்ளது. இந்தியாவில் உயிரிழந்தவர் எண்ணிக்கை 273. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 909 பேருக்கு கரோனா பாதிக்கப்பட்டுள்ளது; 34 பேர் உயிரிழந்துள்ளனர்.
அகமதாபாத்தில் 75 வயதான கரோனா வைரஸ் நோயாளி உயிரிழந்ததை அடுத்து குஜராத் மாநிலத்தில் கோவிட் 19 பலி எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.
குஜராத்தில் கரோனா மெல்ல மெல்ல அதிகரித்துவரும் நிலையில் லாக்டவுன் காரணமாக சிக்கியுள்ள நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவமும் நேற்று முன்தினம் நடைபெற்றது. சூரத்தில் நடந்த போராட்டத்தில் ஒடிசாவைச் சேர்ந்த 80 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்லகள் தாங்கள் சொந்த ஊருக்கு உடனடியாக அனுப்பிவைக்குமாறு கோரிக்கை வைத்ததனர்.
குஜராத்தில் கரோனா நிலவரம் குறித்து மாநில முதன்மை செயலாளர் (சுகாதார) ஜெயந்தி ரவி கூறியதாவது:
அகமதாபாத்தில் 75 வயதான கரோனா வைரஸ் நோயாளி உயிரிழந்தார். ஏற்கெனவே ரத்த அழுத்தம் அதிரித்த நிலையில் இந்த நபர் சனிக்கிழமை இரவு அகமதாபாத், எல்ஜி மருத்துவமனையில் கரோனா நோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். அகமதாபாத்தில் மட்டும் இதுவரை 11 பேர் கோவிட் 19 நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
குஜராத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று புதிதாக 90 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் இந்த எண்ணிக்கை 468 ஆக அதிகரித்துள்ளது. குஜராத்தில் கரோனா பாதிப்பு மெல்ல மெல்ல அதிகாரித்துவரும் அதேவேளையில் குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கையும் 44 ஆக உயர்ந்தது, சனிக்கிழமை பதினொரு நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர்.
இவ்வாறு மாநில முதன்மை செயலாளர் (சுகாதார) ஜெயந்தி ரவி தெரிவித்தார்.