குஜராத்தில் இடஒதுக்கீடு பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட வன்முறைகளைப் பார்த்து நாடே அதிர்ச்சி அடைந்தது என வானொலி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
நாட்டு மக்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு எல்லா பிரச்சினைகளுக்கும் வளர்ச்சி மூலம் தீர்வு காண வேண்டும். மகாத்மா காந்தியும், சர்தார் வல்லபாயும் பிறந்த மண்ணில் எது நடந்தாலும், நாடு அதிர்ச்சிக்குள்ளாகிறது. அமைதி, ஒற்றுமை, சகோதரத்துவம் ஆகியவைதான் சரியான வழி. இந்த வழியில் நாம் இணைந்து நடக்க வேண்டும்.
குஜராத்தில் வன்முறையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர மாநில மக்கள் அளித்த ஒத்துழைப்பை பாராட்டுகிறேன். வன்முறை ஏற்பட்ட பிறகு குறைந்த காலகட்டத்தில் குஜராத்தில் உள்ள என்னுடைய சகோதரர்கள், சகோதரிகள் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டனர். நிலைமையை விபரீதமாக்கவில்லை. அமைதியை நிலைநாட்டிவிட்டனர்.