இந்தியா

கரோனா வைரஸை எதிர்க்க உதவும்; சூரிய ஒளியிலிருந்து வைட்டமின் டி பெறலாம்

செய்திப்பிரிவு

சூரிய ஒளியில் இருந்து பெறும் வைட்டமின் டி அதிக அளவிலான நோய் எதிர்ப்பு சக்தியை நமக்கு அளிக்கும்.

காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சூரிய வெப்பத் தைப் பெறும்போது நமது உடலுக்கு வைட்டமின் டி எளிதில் கிடைக் கிறது. ஆனால் இந்தியாவில் பெரும் பாலோனோர் இந்த வைட்டமின் டி-ஐ சூரிய ஒளி மூலம் பெறு வதில்லை என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

மேலும் நாம் சாப்பிடும் உணவு, கடைப்பிடிக்கும் உணவுப் பழக்க வழக்கங்களாலும் வைட்டமின் டி-யை குறைந்த அளவிலேயே பெறுகிறோம்.

மேலும் பலர் வீடுகளிலும், அலு வலகங்களிலும் ஏ.சி. அறைகளில் பணிபுரிவதால் குறைந்த அள விலேயே வைட்டமின் டி-யை பெற முடிகிறது. காலை 10 மணி முதல் 3 மணி வரை நாம் சிறிது நேரம் நடைபயணம் செய்தாலே நமக்குத் தேவையான வைட்டமின் டி-யை சூரிய ஒளியிலிருந்து பெறலாம். தற்போது வீடுகளிலேயே மக்கள் அடைந்துள்ளனர். இந்த நேரத்தில் நமது உடலில் எதிர்ப்புச் சக்தியைப் பெற தினமும் சிறிது நேரம் நமது உடல் சூரிய ஒளி பெறுமாறு நின்றாலே போதுமானது என்று டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

வைட்டமின் டி என்பது வைட்ட மின் மட்டுமல்ல. அது ஒரு நுண் ஊட்டச்சத்து என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். வைட்ட மின் டி உடலில் அதிகம் இருக் கும், கரோனா வைரஸை எதிர்த் துப் போரிடுவதற்கான பணிகளில் வைட்டமின் டி ஈடுபடும் என்பதற் கான சான்றுகள் கிடைத்துள்ளன.

மேலும், இந்த வைட்டமின் டி-யானது கரோனா வைரஸ் நோயாளிகளில் காணப்படும் சைட் டோகைன் என்ற பிரச்சினையைத் தீர்க்கும் ஆற்றலைக் கொண் டுள்ளது.

மேலும் இது நம் உடலில் கேத்தெலிசிடின்கள் மற்றும் டிபென் சின்களின் உற்பத்தியை அதிகரிப் பதன் மூலம் நமது உடலில் உள் ளார்ந்த நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த முடியும் என்று மருத் துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தண்ணீர், இளநீர் முக்கியம்

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை (டிபிஎச்) இயக்குநர் டாக்டர் க.குழந்தைசாமி கூறியதாவது:

வைட்டமின் டி மட்டும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துவிடாது. எல்லா வைட்டமின்களும் உடலுக்கு தேவை. அப்போதுதான் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி தேவையான அளவு அதிகரிக்கும். வைட்டமின் டி-ஐ சூரிய ஒளியில் இருந்து எளிதாக பெறலாம். மற்ற வைட்டமின்களை காய்கறிகள், பழங்கள், கீரைகளை உணவுடன் சேர்த்துக் கொள்வதன் மூலம் பெற முடியும். அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். நெல்லிக்காய் சாப்பிட வேண்டும். இளநீர் குடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT