இந்தியா

கரோனா வைரஸ்: ஏப்ரல் 30ம் தேதி வரை லாக்-டவுன் உத்தவை நீட்டித்தது ஒடிசா- ஜூன் 17 வரை கல்விநிலையங்களுக்கு விடுமுறை 

செய்திப்பிரிவு

இந்தக் காலக்கட்டத்தில் மக்களின் உயிரைக் காப்பாற்றுவதுதற்குத்தான் அதிக முன்னுரிமை என்று கூறிய ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் முழு ஊடரங்கு மற்றும் அடைப்பு உத்தரவை ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்தார்.

பொருளாதார நடவடிக்கைகளா மக்கள் உயிரா என்று யோசித்த போது மக்கள் உயிரைக் காப்பாற்றுவதுதான் முக்கியம் என்று அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுத்ததாக தெரிவித்தார்.

வீடியோ செய்தியில் முதல்வர் நவீன் பட்நாயக் தேசிய அளவிலும் லாக்-டவுன் உத்தரவை ஏப்ரல் 30 வரை நீட்டிக்குமாறு பிரதமருக்கும் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் மத்திய அரசு ரயில் சேவை, விமான சேவைகளையும் ஏப்ரல் 30வரை தொடங்கக் கூடாது என்ற கோரிக்கையையும் அவர் முன் வைத்துள்ளார். கல்வி நிலையங்கள் ஜூன் 17ம் தேதி வரை திறக்கப்படமாட்டாது என்றும் அறிவித்துள்ளார்.

வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, மகாத்மா காந்தி ஊரக வேலைகள் சமூக விலக்கள் நடைமுறைகளுடன் லாக்-டவுன் காலக்கட்டத்தில் தொடரலாம் என்று ஒடிசா அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.

மேலும் மாநிலம் முழுதும் 1 லட்சம் பேருக்கு அதிவிரைவு கரோனா டெஸ்ட் செய்யப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.

வாழ்க்கை இனி பழைய மாதிரி இருக்கப் போவதில்லை என்றுகூறும் நவீன் பட்னாயக் ‘நான் அனைவரும் ஒன்றிணைந்து தைரியமாகக் கரோனாவை எதிர்கொள்வோம்” என்றார்.

SCROLL FOR NEXT