இந்தியா

நேதாஜி குறித்த ஆவணங்களை வெளியிட முடியாது: மத்திய தகவல் ஆணையத்தில் பிரதமர் அலுவலகம் மறுப்பு

பிடிஐ

சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் குறித்த ரகசிய‌ ஆவணங்களை பொது வெளியில் வெளியிட முடியாது என்று பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது. அவ் வாறு ஆவணங்களை வெளியிட் டால், அது இந்தியாவின் பன்னாட்டு உறவுகளை பாதிக்கும் என்றும் அது கூறியுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், ஆர்.டி.ஐ.செயற் பாட்டாளர் சுபாஷ் அகர்வால் என்பவர் மத்திய தகவல் ஆணையத் திடம் ஒரு மனு செய்திருந்தார்.

அந்த மனுவில், `ஆர்.டி.ஐ.சட்டத்தின் பிரிவு 8(2)ன் படி, சில தனி நபர்களுக்கு ஏற்படும் கெடுதலை விட, பெரும்பாலான மக்களுக்கு ஏற்படும் பொது நலன் அதிக அளவில் இருக்கும்பட்சத் தில், ரகசிய ஆவணங்களை பொதுத் தளத்தில் வெளியிடலாம் என்று கூறப்பட்டுள்ளது' என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

மேலும் அதில், `70 ஆண்டு களுக்கு முன்பு சுபாஷ் சந்திர போஸ் காணாமல் போய்விட்ட தாகக் கூறப்படும் பட்சத்தில், தற்போது அவர் தொடர்பான ஆவணங்களை வெளியிடுவதால் பன்னாட்டு உறவுகள் பாதிக்கப் படாது' என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை நேற்று விசாரித்த மத்திய தகவல் ஆணையம், பிரதமர் அலுவலக அதிகாரி களிடம் விளக்கம் கேட்டது. அதற்கு அவர்கள் `போஸ் தொடர்பான ரகசிய ஆவணங்களை வெளியிட முடியாது' என்று தெரிவித்தனர்.

இந்தப் பிரச்சினையில் மத்திய தகவல் ஆணையம் தனது தீர்ப்பை தள்ளி வைத்துள்ளது.

SCROLL FOR NEXT