இந்தியா

அறிவியல், தொழில்நுட்பத்துக்கு உகந்த மொழி சமஸ்கிருதம்: ராஜ்நாத் சிங்

பிடிஐ

லக்னோவில் கல்வி நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அறிவியல், தொழில்நுட்பத்துக்கு உகந்த மொழி வடமொழியான சமஸ்கிருதமே என்று தெரிவித்துள்ளார்.

"சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட புராணங்கள் மூலம் சிக்கலான தத்துவக் கேள்விகளுக்கு விடை கிடைத்துள்ளது. வேறு எந்த மொழியும் இத்தகைய சிக்கலான தத்துவ கேள்விகளுக்கு விடை அளிக்கவில்லை.

கலை, இலக்கியம் அல்லது அறிவியில், தொழில்நுட்பம் என்று எந்தத் துறையாக இருந்தாலும் சமஸ்கிருதத்தின் பயனை அறிஞர்கள் பலர் ஒப்புக் கொண்டுள்ளனர்.

சூப்பர் கணினியை கட்டமைத்த நாசா கூட சமஸ்கிருதமே அதற்கு பொருத்தமான மொழி என்று கூறியுள்ளது, ஆனால் இந்தியாவில் நாம் அதனை விட்டு விலகியுள்ளோம் என்பதே ஒரு முரண்.

மற்ற மொழிகளின் உச்சரிப்புகள் பிரதேசத்துக்கு பிரதேசம் மாறுதல் அடையும் நிலையில், சமஸ்கிருதம் அதன் விஞ்ஞான அடிப்படையினால் ஒரே மாதிரியான உச்சரிப்பு முறையைக் கொண்டுள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் உள்ள இளைஞர்கள் கூட சமஸ்கிருதம் வாசிக்கின்றனர்.

எனவே, விருப்புறுதி இருந்தால் சமஸ்கிருத மொழியை மீண்டும் ஒவ்வொரு வீட்டுக்கும் எடுத்துச் செல்ல முடியும்” இவ்வாறு பேசினார் ராஜ்நாத் சிங்.

SCROLL FOR NEXT