உத்தரப் பிரதேச மாநிலத்தின் 66 தாலுக்காக்களில் தீயணைப்பு வண்டிகளை தூய்மையாக்கப் பணிகளுக்காக பயன்படுத்தப்படுவதை முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார்.
“ஏறக்குறைய 10 நாட்களுக்கு முன்பாக டிஜிபியும் உள்துறை கூடுதல் செயலரும் தீயணைப்பு வண்டிகளை தூய்மைப் பணிகளுக்காகப் பயன்படுத்துவதை முன்மொழிந்தனர். இதன் மூலம் கிராமங்களும் நகரங்களும் தொற்றுகளிலிருந்து விடுபட உதவும்.
நவீன தீயணைப்பு வண்டிகள் சமீபத்திய தொழில்நுட்பத்துடன் கூடியது. கரோனாவை ஒழிக்க இவைகளைப் பயன்படுத்தலாம்.
வெப்பம் அதிகரிப்பினால் ஏற்படும் தீவிபத்துகளைச் சமாளிக்கவும் கோவிட்-19- வைரஸ் பரவலைத் தடுக்கவும் இந்த தீயணைப்பு வண்டிகள் ஈடுபடுத்தப்படுகின்றன” என்று யோகி ஆதித்யநாத் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தார்.
உ.பி.யில் வைரஸ் ஹாட்ஸ்பாட் பகுதிகள் ஏப்ரல் 15ம் தேதி வரை முழுதும் சீல் வைக்கப்படுகிறது.
கோவிட்-19 வைரஸுக்கு இந்தியாவில் 149 பேர் பலியாகியுள்ளனர், பாதிப்பு எண்ணிக்கை 5,194 ஆக அதிகரித்துள்ளது. உத்தரப் பிரதேச லாக் டவுன் உத்தரவுகளை மீறியதற்காக பிரோசாபாத்தில் 69 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.