இந்தியா

‘‘உலகிலேயே பெரிய கட்சி பாஜக; பிரதமர் மோடியை உலகமே உற்றுப் பார்க்கிறது’’ - ஜே.பி. நட்டா பெருமிதம்

செய்திப்பிரிவு

உலகிலேயே மிகப் பெரிய அரசியல் கட்சி என்ற பெருமையை பாஜக பெற்றுள்ளது, அதுவும் மக்களுக்கு தொண்டாற்றும் கட்சி என அக்கட்சியின் தலைவர் ஜே.பி. நட்டா கூறினார்.

பாஜக 1980-ம் ஆண்டு இதேநாளில் தொடங்கப்பட்ட நிலையில் அக்கட்சியின் 40-ம் ஆண்டு நிறுவன நாள் தினத்தை பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். இந்தநிலையில்
இதுகுறித்து ஜே.பி.நட்டா கூறியதாவது:

பாஜகவின் 40-வது நிறுவன நாள் தினத்தை முன்னிட்டு கட்சி தொண்டர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உலகிலேயே மிகப் பெரிய அரசியல் கட்சி என்ற பெருமையை பாஜக பெற்றுள்ளது. அதுவும் மக்களுக்கு தொண்டாற்றும் கட்சி. இந்த கட்சியில் இணைந்து பணியாற்றுவதை எண்ணி பாஜகவினர் அனைவரும் மகிழ்ச்சி கொள்வோம்.

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பால் போராடி வரும் வேளையில் பிரதமர் மோடி தலைமையில் இந்தியாவும் போராட்டம் நடத்தி வருகிறது. பிரதமர் மோடி ஆற்றி வரும் பணிகளை கண்டு உலகமே உற்று நோக்குகிறது. விரைவில் நாம் இந்த போராட்டத்தில் வென்று மீளுவோம்.
இவ்வாறு ஜே.பி.நட்டா கூறினார்.

SCROLL FOR NEXT