ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் வைரஸ்களுக் கான தடுப்பு மருந்து குறித்து ஒரு ஆராய்ச்சி கட்டுரையை வெளியிட்டுள்ளனர்.
ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்தான இவர்மெக்டின், கரோனா வைரஸை 48 மணி நேரத்தில் கொல்லும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எச்ஐவி, டெங்கு, இன்ப்ளுயென்சா மற்றும் ஜிகா வைரஸ்களையும் இந்த மருந்து கொல்லும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆராய்ச்சி குழுவின் தலை வர் கைலி வாக்ஸ்டாப் கூறும் போது, “ஆய்வகத்தில் நுண்ணு யிரியைக் கொண்டு ஆய்வு செய்தபோது, ஒரு முறை இவர் மெக்டின் மருந்தை கொடுத் தால்கூட, 48 மணி நேரத் தில் அனைத்து வைரல் ஆர்என் ஏவும் அழிந்துவிடுவது தெரிய வந்துள்ளது. இனிமேல் தான் மனிதர்களுக்கு வழங்கி சோதனையில் ஈடுபட உள் ளோம்” என்று தெரிவித்தார்.