டெல்லியில் அண்மையில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் முஸ்லிம் மாநாட்டில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர். அவர்களில் சிலருக்கு கரோனா வைரஸ் தொற்று இருந்தது. இதனால் மாநாட்டில் பங்கேற்ற பலருக்கும் தொற்று ஏற்பட்டது. இதையடுத்து மாநாட்டில் கலந்துகொண்டவர்களைக் மத்திய அரசு கண்டறிந்து பல்வேறு மருத்துவமனைகளில் அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறது.
குஜராத் மாநிலம் அகமதாபாதிலுள்ள சோலா மருத்துவமனையில் தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்ட 26 பேர் சிகிச்சைக்காக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று அங்கு தங்கியுள்ள முஸ்லிம்கள் சிலர் ஆர்ப்பாட்டம் செய்தனர். தனிமை வார்டில் வைத்து அரசு எங்களை கொலை செய்யப் பார்க்கிறது என்று அவர்கள் கோஷம் எழுப்பி ரகளையில் ஈடுபட்டனர். மேலும் மருந்துகளை சாப்பிடவும் அவர்கள் மறுத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.