கோப்புப்படம் 
இந்தியா

கரோனா லாக்டவுன்: ஏப்ரல் 14-க்குப்பின் முழுமையாக ரயில் போக்குவரத்து தொடங்குமா? என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன?

பிடிஐ

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் 21 நாட்கள் லாக்டவுன் ஏப்ரல் 14-ம் தேதி முடிந்தபின் ரயில் போக்குவரத்து முழுமையாகத் தொடங்குமா என்பதில் பல்வேறு குழப்பங்கள் எழுந்துள்ளன.

ரயில் போக்குவரத்தை தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மண்டலங்கள் செய்தாலும் முழுமையாகத் தொடங்குமா என்பது குறித்து தெளிவான பதில் இல்லை. இதுகுறித்து வரும் வாரத்தில் தான் முடிவு செய்யப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன

அதேசமயம் ரயில் போக்குவரத்து ஏப்ரல் 15-ம் தேதியிலிருந்து தொடங்கினால் பயணிகள் அனைவரும் சமூக விலக்கலை கடைபிடித்தல், ஆரோக்கி சேது செயலியைப் பயன்படுத்த அறிவுறுத்தல், முகக்கவசம் கட்டாயமாக அணிதல் போன்றவை ரயில்வே துறை சார்பில் வலியுறுத்தப்படும். பயணிகள் தீவிர தெர்மல் ஸ்கேனிங்கிற்கு பின்பே பயணத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன

இதுகுறித்து ரயில்வே வாரியத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ ரயில் போக்குவரத்தை வரும் 14-ம் தேதி்க்குப்பின் தொடங்குவது குறித்து எந்த முடிவும் இன்னும் எடுக்கவில்லை. கடந்த 25-ம்தேதி முதல் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. அரசிடம் இருந்து அனுமதி கிடைத்தபின் முழுமையாகவும் தொடங்கவும் வாய்ப்பு இல்லை, பலகட்டங்களாகவே ரயில் போக்குவரத்து தொடங்கும்

ரயில் வாரியத்தின் அனுமதியுடன் குறிப்பிட்ட வழித்தடத்தில் மட்டும் ஒவ்வொரு ரயில் போக்குவரத்தைும் தொடங்கலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இது மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய கால கட்டம்,இதில் வருவாய் திரட்டுவதைப் பார்ப்பதைக் காட்டிலும் பயணிகளின் பாதுகாப்பு மிகவும் முக்கியம், நோய்கள் ஏதும் பரவிவிடக்கூடாது. அரசு அனுமதியளித்தவுடன் ரயில்கள் இயக்கப்படும் ஆனால், அதுகுறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.

ரயில்வே வாரியத்தின் ஒப்புதல் கிடைத்தவுடன் மண்டல வாரியாக எந்தெந்த ரயில்களை இயக்குவது குறித்து அதிகாரிகள் திட்டமிடுவார்கள். முதலில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சிலஇடங்களில் தேங்கி இருக்கிறார்கள் அவர்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல வழித்தடத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

அனைத்திலும் முக்கியமான விஷயம் லாக்டவுன் முடிந்தபின் ரயில்களை எவ்வாறு இயக்குவதுதான் முக்கிய ஆலோசனையாக இருக்கும்.

லாக்டவுனுக்கு முன் நோயாளிகள், மாணவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் டிக்கெட் முன்பதிவில் சலுகை தரப்பட்டு மற்றவற்றுக்கு ரத்துசெய்யப்பட்டன அவை அப்படிேய தொடரும். சில ரயில் நிலையங்களில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் அதனால் பயணிகள் கூட்டத்தைக் குறைக்க சில கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படலாம்.

அதுமட்டுமல்லாமல் நீண்டநாட்களாக பயணிகள் ரயில்கள், பெட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன. அவற்றின் மின்கலன்கள் உள்ளிட்ட அனைத்தையும் பராமரிப்பு செய்ய வேண்டும்,கழிவறை சுத்தம்,இருக்கை , படுக்கைகள் சுத்தம் ஆகியவற்றையும் மேற்கொள்ள வேண்டும் இவை அனைத்தும் முடிந்தபின்புதான் ரயில் போக்குவரத்து முழுமையாக தொடங்கப்படும்” இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்

SCROLL FOR NEXT