கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு அமலலில் இருக்கும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு வரும் 14-ம் தேதியுடன் முடிந்தபின் 15-ம் தேதிமுதல் சர்வதேச, உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு நாட்டில் 21 நாட்கள் லாக்டவுன் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்து அமல்படுத்தியுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு வரும் 14-ம் ேததி முடிவுக்கு வருகிறது. இந்த காலகட்டத்தில் அனைத்து உள்நாட்டு , வெளிநாட்டு விமானங்கள் ேசவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதேசமயம் சரக்குவிமானம், ஹெலிகாப்டர் சேவை, மருத்துவ உதவி விமானங்கள், சிறப்பு விமானங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது
இந்நிலையில் வரும் 14-ம் தேதி நள்ளிரவோடு இந்த ஊரடங்கு முடிவதால் அதன்பின் உள்நாட்டு, சர்வதேச விமானப் போக்குவரத்தை மத்தியஅரசு அனுமதிக்கும் என மத்தியஅரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து மத்தியவிமானப் போக்குவரத்துதுறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ வரும் 14-ம் தேதிக்குப்பின் உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவையை தொடங்க அனுமதியளிப்பது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம். இன்னும் இந்தியாவில் வைரஸ் பரவிக்கொண்டுதான் இருக்கிறது. அதேசமயம் ஏப்ரல் 14-ம் தேதிக்குப்பின் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்க விமானநிறுவனங்களுக்கு அனுமதி உண்டு. ஒரு வேளை லாக்டவுன் 14-ம் தேதிக்குப்பின்பும் நீட்டிக்கப்பட்டால், அடுத்த காலம் வரும்வரை முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை ரத்து செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்
ஏர் இந்தியா விமானம் தவிர்த்து அனைத்து விமானங்களும் ஏப்ரல் 14-ம் தேதிக்குப்பின் டிக்கெட் முன்பதிவைத் தொடங்கும் எனத் தெரிகிறது. ஏர் இந்தியா ஏப்ரல் 30-ம் தேதிக்குப்பின்புதான் முன்பதிவைத் தொடங்க உள்ளது.
இதற்கிடையே ஏர்டெக்கான் விமானநிறுவனம் எப்போது விமான ேசவையை தொடங்குவோம் எனச் சொல்லாமல் காலவரையின்றி சேவைரத்து செய்வதாக அறிவித்து, விமான பணியாளர்களுக்கும் ஊதியமில்லா விடுப்பில் அனுப்பியது.
வருவாய் கடுமையாகக் குைறந்ததால் இன்டிகோ விமானம் ஊழியர்களுக்கு 25 சதவீதம் ஊதியத்தைக் குறைத்துள்ளது, விஸ்தாரா விமான நிறுவனம் மூத்த நிர்வாகிகளுக்கு 3 நாட்கள் ஊதியமில்லாமல் கட்டாய விடுப்பு கொடுத்துள்ளது
ஸ்ைபஸ் ஜெட் நிறுவனம் ஊழியர்களுக்கு 10 முதல் 30 சதவீதம் வரையிலும், ஏர் இந்தியா நிறுவனம் 10 சதவீதம் வரையிலும் ஊழியர்களுக்கு ஊதியத்தை குறைத்துள்ளன.