உத்தரப்பிரதேசத்தில் 6 மற்றும் 10 வயதுடைய சகோதரிகள் இருவர் தங்களது உண்டியல் சேமிப்பை எடுத்து கரோனா லாக்-டவுன் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதற்காக பிரதமர் கேர்ஸ் நிதியத்துக்கு அளித்துள்ளனர்.
கவுரவ் அரோரா என்ர தொழிலதிபர்களின் மகள்கள் மாயிஷா அரோரா, ஆலியா அரோரா ஆவார்கள். இவர்கள் லா மார்டினியர் பெண்கள் பள்ளியில் லக்னோவில் படித்து வருகின்றனர்.
இவர்கள் தாங்கள் இத்தனை காலமாக சேமித்து வைத்த தலா ரூ.5,000 தொகையை கரோனா லாக்-டவுன் பாதிப்படைந்தவர்களுக்காக நன்கொடையாக அளித்துள்ளார்கள்
இவர்கள் தாத்தா குல்பூஷன் அரோரா, இவர் வியாபார் மண்டலின் தலைவராவார், தாத்தாவின் உதவிக் குணங்களினால் தூண்டப்பட்ட சிறுமி சகோதரிகள் தங்கள் உண்டியல் சேமிப்பை நன்கொடையாக தந்து உதவியுள்ளனர்.
மாவட்ட மேஜிஸ்ட்ரேட் ஷாம்பு குமார் சிறுமிகளின் பங்களிப்பை விதந்தோதியுள்ளார், இதன் மூலம் இந்தச் சிறுமிகள் முன்னுதாரணமாகத் திகழ்வதாக அவர் பாராட்டினார்.
மேலும் அவர் பாராட்டும் போது, “இந்தக் கடினமான காலக்கட்டத்தில் குழந்தைகள் தங்கள் நலன்களைக் கருதாமல் தாங்கள் பொக்கிஷமாகக் கருதும் உண்டியல் சேமிப்பை பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கியது வயதுக்கும் கருணை உள்ளத்துக்கும் சம்பந்தமில்லை என்பதை நிரூபிப்பதாக உள்ளது” என்றார்.