கரோனா வைரஸ் நோய்ப் பரவலைத் தொடர்ந்து, குவைத்தின் அஹ்மதியில் உள்ள ஒரு கிளினிக்கில், ஒரு இந்தியத் தொழிலாளியை மருத்துவர் பரிசோதிக்கிறார். 
இந்தியா

குவைத்தில் 26 இந்தியர்களுக்கு கரோனா: வளைகுடாவில் இந்தியர்கள் நிலை என்ன?  இரு நாட்டு பிரதமர்கள் பேச்சு

அதுல் அனேஜா

குவைத்தில் பணியாற்றும் 26 இந்தியர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக குவைத் சுகாதார அமைச்சககம் கூறியுள்ளது. இதனை குவைத் டைம்ஸ் இன்று செய்தியாக வெளியிட்டுள்ளது.

வளைகுடாவில் உள்ள மில்லியன் கணக்கான இந்தியத் தொழிலாளர்களின் நிலைமை குறித்து புதுடெல்லி ஒரு கண் வைத்திருக்க வேண்டும் என்பதற்கான எச்சரிக்கையாகவே இது பார்க்கப்படுவதாக குவைத் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த புதன்கிழமை இது தொடர்பாக பிரதமர் மோடி, தொலைபேசியில் குவைத் பிரதமர் ஷேக் சபா அல்-கலீத் அல்-ஹமத் அல்-சபாவை, குவைத் மாநில முதல்வரை அழைத்துப் பேசினார்.

இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

''குவைத்தில், ஏப்ரல் 1 மற்றும் 2 ஆகிய இரு தேதிகளுக்குள் நடத்தப்பட்ட சோதனைகளில் 28 வெளிநாட்டவர்களுக்கு கோவிட்-19 நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவற்றுள் 24 பேர் இந்தியர்கள். 2 பேர் வங்க தேசத்தவர்கள். நேபாளத்தைச் சேர்ந்தவர் ஒருவர்.

ஏற்கெனவே இரு இந்தியர்களுக்கு கரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில் தற்போது மொத்தம் 26 இந்திய வெளிநாட்டவர்கள் குவைத்தில் கரோனா பாதிக்கப்பட்டவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் குவைத்தில் மொத்தம் 317 பேருக்கு கோவிட்-19 இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

வளைகுடா நாடுகளில் வாழும் இந்தியர்கள் நிலை குறித்து அவ்வப்போது இந்தியா கேட்டறிந்து வருகிறது.

இது தொடர்பாக பிரதமர் மோடி, தொலைபேசியில் குவைத் பிரதமர் ஷேக் சபா அல்-கலீத் அல்-ஹமத் அல்-சபாவை, குவைத் மாநில முதல்வரை அழைத்துப் பேசினார்.

உரையாடலின் போது, இரு தலைவர்களும் கோவிட்-19 தொற்றுநோயின் தற்போதைய உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலவரங்கள் பற்றி விவாதித்தனர்.

அப்போது சுகாதார நெருக்கடி அதிகரித்தால் இரு நாட்டு அதிகாரிகளும் தொடர்புகொள்வார்கள் என்றும் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்றும் பரஸ்பர ஆதரவின் வழிகளை ஆராய்வதற்கும் இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்''.

இவ்வாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT