கரோனா வைரஸ் விவகாரத்தில் பொதுமக்களை காங்கிரஸ் கட்சி தவறாக வழிநடத்துவதாக மத்திய உள் துறை அமைச்சர் குற்றம் சாட்டி உள்ளார்.
மத்திய அரசு முறையாக திட்டமிடாமல் ஊரடங்கை அமல்படுத்தியதால் லட்சிக் கணக்கானோர்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தாக காங்கிரஸ் தலைவர் சோனியா குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா நேற்று கூறியதாவது:
கரோனா வைரஸ் பரவு வதைத் தடுக்க பிரதமர் நரேந் திர மோடி தலைமையிலான மத்தியஅரசு, எடுத்து வரும் நடவடிக்கையை உலக நாடுகள் பாராட்டி உள்ளன. 130 கோடி இந்தியர்களும் இணைந்து கரோனாவை ஒழிக்க முயன்று வருகின்றனர்.
ஆனால், இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி மலிவான அரசியலில் ஈடுபட்டு வருகிறது. இந்த இக்கட்டான தருணத்தில் பொதுமக்களை தவறாக வழிநடத்துவதை விடுத்து, நாட்டு நலன் பற்றி சிந்தித்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.- பிடிஐ