இந்தியா

எம்.பி.கள் இடைநீக்கம்: சுமித்ரா மகாஜன் விளக்கம்

ஐஏஎன்எஸ்

காங்கிரஸ் கட்சியின் 25 எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை திரும்பப் பெறக் கோரி இதுவரை யாரும் தன்னை அணுகவில்லை என்று மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் தெரிவித்துள்ளார்.

மக்களவையின் நடவடிக் கைகளுக்கு குந்தகம் ஏற்படுத்தி யதாகக் கூறி, காங்கிரஸ் எம்பிக்கள் 25 பேரை 5 நாட்களுக்கு இடைநீக்கம் செய்து சுமித்ரா மகாஜன் கடந்த திங்கள்கி ழமை உத்தரவிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமையில் அக்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் மூன்றாவது நாளாக நேற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து நாடாளு மன்றத்துக்கு வெளியே சுமித்ரா மகாஜன் செய்தியாளர்களிடம் கூறும்போது;

“எம்பிக்கள் இடைநீக்கத்தை திரும்பப் பெறக் கோரி இதுவரை யாரும் என்னை அணுகவில்லை. இதுதொடர்பான கோரிக்கையும் யாரிடமிருந்தும் எனக்கு வரவில்லை.

இதுவிஷயத்தில் தாமாக முன்வந்து திரும்பப் பெற முடியாது” என்றார்.

SCROLL FOR NEXT