கரோனா பாதிப்பு ஹாட்ஸ்பாட்டாக மாறி வருகிறது மகாராஷ்ட்ரா இந்நிலையில் நேற்று நள்ளிரவு அறிக்கையின் படி 302 ஆக இருந்த கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை தற்போது 320 ஆக அதிகரித்துள்ளது.
அதாவது மேலும் 18 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி ச்செய்யப்பட்டுள்ளடு.
இந்த 18 புதிய கரோனா தொற்றுக்களில் 16 பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். 2 பேர் புனேயைச் சேர்ந்தவர்கள்.
திங்கள் இரவு தெரியவந்த 42 கரோனா சந்தேக தொற்றுகளில் இறுதி மருத்துவ சோதனை அறிக்கைகளுக்காக காத்திருக்கப்படுவதால் இன்னும் மாநில சுகாதார துறை இதனை உறுதி செய்யவில்லை.
மும்பையில் 59, அஹமெட் நகர் 3, புனே, தானே, கல்யா, தோம்பிவலி, நவி மும்பை, மற்றும் பல்காரிலிருந்து தலா 2 பேர்களுக்கு வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை கோவிட்-19 தொற்றுக்கு 10 பேர் பலியாகியுள்ளார். இதில் மும்பையில் 8 பேர்களும் புனே, புல்தானா ஆகிய இடங்களில் தலா ஒருவரும் மரணமடைந்துள்ளனர். இதில் அயல்நாட்டு பயணம் ஏதுமில்லாத 40 வயது நபரும் ஒருவர்.
மகாராஷ்ட்ராவில் அதிக வைரஸ் தொற்றுக்குக் காரணமாக மக்கள் தொகை அடர்த்தியே கூறப்படுகிறது, அதுவும் குடிசைவாழ் பகுதி மக்களிடையே சமூக விலகல் சாத்தியமேயில்லை.
மும்பை குடிசைப்பகுதிகளில் லட்சக்கணக்கானோர் மிகவும் கீக்கடமான இடங்களில் வசித்து வருகின்றனர், சுகாதாரம் அவ்வளவாக இல்லை, தண்ணீர் பற்றாக்குறை, திறந்த வெளிகளோ, பசுமையோ இல்லாத இடங்களில் வசிக்கின்றனர், இதுவே இவர்களை வைரஸ் உள்ளிட்ட தொற்றுக்களுக்கு வெகு எளிதில் ஆளாக்குகிறது என்கிறது மாநிலச் சுகாதாரத் துறை.