ஜம்மு - காஷ்மீரில் ராணுவ ரோந்து வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.
இது குறித்து ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அக்னூர் மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டுப் பகுதி அருகே செல்லும் ரோந்து வாகனத்தை குறி வைத்தே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக என்றார்.
மேலும், வாகனம் செல்லும் பாதையில் வெடிகுண்டை மறைத்து வைத்து அதை ரிமோட் மூலம் இயக்கி தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
தீவிரவாதிகள் தாக்குதலில் இறந்தவர் ராணுவ வீரர் பிக்காலே என அடையாளம் காணப்பட்டுள்ளது. தலைமை காவலர் வினோத் குமார், ராணுவ வீரர் அமோல் குமார் ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ரஜோரி மாவட்டம் பிம்பர் கலி நிலை வாயிலாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றதை நேற்று இந்திய ராணுவம் முறியடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.