இந்தியா

கரோனா வைரஸுக்கு சீக்கிய மதகுரு பலியானதையடுத்து பிரச்சாரம் மேற்கொண்ட கிராமங்களுக்கு ‘ஹை அலெர்ட்’- 15 கிராமங்கள் தனிமைப் படுத்தப்பட்டது

செய்திப்பிரிவு

பஞ்சாப் மாநிலத்தில் கரோனா வைரஸுக்குப் பலியானார் 70 வயது சீக்கிய மத குரு பல்தேவ் சிங். இவர் கரோனா மையமான இத்தாலி, ஜெர்மனியிலிருந்து திரும்பி வந்து கிராமம் கிராமமாகச் சென்று மதப் பிரச்சாரம் மேற்கொண்டதையடுத்து 12க்கும் மேற்பட்ட பஞ்சாப் கிராமங்களில் உச்சபட்ச உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் இதுவரையிலான உச்ச பட்ச எச்சரிக்கை மணி இதுவாகவே இருக்கும்.

ஏ.எஃப்.பி. செய்தி ஏஜென்சிக்கு மூத்த மேஜிஸ்ட்ரேட் கவ்ரவ் ஜெயின் கூறும்போது, “மார்ச் 18-ல் 15 கிராமங்களில் ஒரு கிராமம் முழுக்கவும் சீல் செய்யப்பட்டது. மொத்தமாக சீல் வைக்கப்பட்ட கிராமங்களில் 15,000-20,000 மக்கள் இருப்பார்கள், மருத்துவக் குழுக்கள் ரெகுலர் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்” என்றார்.

மரணமடைந்த மதகுரு பல்தேவ் சிங்குடன் நெருக்கமாக இருந்த 19 பேருக்கு ஏற்கெனவே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு விட்டது. மேலும் 200 பேர்களின் மருத்துவப் பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்கிறார்கள்.

ஐரோப்பாவிலிருந்ந்து வந்த மதகுரு பல்தேவ் சிங் சுய அன்னியப்படுத்தல் உத்தரவுகளை மதிக்கவில்லை. தான் வைரஸால் நோய்வாய்ப்பட்டு இறக்கும் வரை மதப்பிரசங்கம் செய்து வந்துள்ளார்.

இந்த மதகுருவின் செயலை விமர்சித்து கனடாவில் உள்ள வெகுஜன பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலா என்பவர் ஒரு பாடல் ஒன்றை யூடியூபில் வெளியிட அதனை 2 நாட்களில் 2.3 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.

“மரணத்தின் நிழல் போல் கிராமங்களில் சுற்றித்திரிந்து நோயைப் பரப்பியுள்ளேன்” என்று அந்தப் பாடல் வரிகள் உள்ளன. பஞ்சாப் போலீஸ் அதிகாரி தினகர் குப்தா இந்தப் பாடலை விழிப்புணர்வாகப் பாவித்து அனைவரும் கேளுங்கள் என்று கூறிவருகிறார்.

SCROLL FOR NEXT