இந்தியா

2 மாதங்களில் 15 லட்சம் பேர் இந்தியா வருகை

செய்திப்பிரிவு

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கடந்த 2 மாதங்களில் சர்வதேச பயணிகள் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்தியா வந்துள்ளனர். இவர்களின் எண்ணிக்கைக்கும் கரோனா வைரஸ் தொடர்பாக கண்காணிக்கப்படுவோரின் எண்ணிக்கைக்கும் இடைவெளி நிலவுவதாக தோன்றுகிறது. வெளிநாடுகளில் இருந்து வந்த பலருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியான நிலையில், இந்த இடைவெளியானது கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளார்.

SCROLL FOR NEXT