இந்தியாவில் இன்று 88 பேருக்கு கரோனா வைரஸால் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும்நிலையில் இந்தியாவில் வைரஸ் தொற்று ஏற்பட்டு பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் இன்று 88 பேருக்கு கரோனா வைரஸால் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் நாடுமுழுவதும் கரோனா தொற்று ஏற்பட்டு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 694 ஆக உயர்ந்துள்ளது.