இந்தியா

டெல்லியில் மொஹல்லா மருத்துவமனை மருத்துவர், மனைவி, மகளுக்கு கரோனா வைரஸ் தொற்று

செய்திப்பிரிவு

டெல்லி மொஹல்லா கம்யூனிட்டி கிளினிக் மருத்துவருக்கு கரோனா வைரஸ் சோதனையில் பாசிட்டிவ் என்று வந்துள்ளது. இவரது மனைவி, மகள் ஆகியோருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மார்ச் 12ம் தேதி முதல் மார்ச் 18ம் தேதி வரை மாஜ்பூரில் உள்ள கிளினிக்கில் சிகிச்சை பெற்ற அனைவரையும் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டதோடு கோவிட்-19 அறிகுறிகள் இருந்தால் மருத்துவமனைக்குச் செல்ல கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கரோனா தொற்றிய மருத்துவர் அயல்நாடு சென்று திரும்பியவரா, அல்லது அயல்நாட்டிலிருந்து திரும்பியவர்களுடன் தொடர்பு ஏற்பட்டதா என்ற விவரங்கள் இனிமேல் தான் தெரியவரும்.

மொஹல்லா மருத்துவமனைகள் டெல்லி கேஜ்ரிவால் அரசு ஏற்படுத்திய சமூகத்தில் நலிவுற்றோருக்கான ஆரம்ப சுகாதார மையங்களாகும். எனவே நலிவுற்றோர் மத்தியில் கரோனா பரவினால் அது மிகப்பெரிய சேதங்களை ஏற்படுத்தும் அச்சுறுத்தல் கொண்டது.

புதனன்று அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவிக்கையில் புதிதாக 5 பேருக்கு கரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளதாகக் கூறினார்.

சாலைகளில் ஆன் லைன் சில்லரை விற்பனையாளர்கள் போலீஸாரி நடவடிக்கைக்கு ஆளாவதால் அவர்களுக்கு அடையாளத்துடன் ஈ-பாஸ் வழங்கப்படும் என்று கேஜ்ரிவால் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT