இந்தியா

லாக்-டவுன் சமயத்திலும் ராமர் விக்கிரகத்தை இடம் மாற்றிய உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்

உமர் ரஷித்

தேசம் முழுதும் லாக் - டவுன் மற்றும் சமுதாய விலகல் நடைமுறைகள் இருந்து வரும் நிலையில் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் புதனன்று கலந்து கொண்ட நிகழ்ச்சியில் குழந்தை ராமர் விக்கிரகம் அயோத்தியில் உள்ள தற்காலிக ராமஜென்ம பூமி கட்டிடத்துக்கு மாற்றப்பட்டது. ராமர் கோயில் கட்டும் வரை விக்கிரகம் இங்கு இருக்கும் முகமாக இந்த மாற்றம் செய்யப்பட்டது.

மாநில மக்கள் மதரீதியான கூடுதல்களில் கலந்து கொள்ள வேண்டாம் என்று யோகி ஆதித்யநாத் மக்களுக்கு அறிவுரை வழங்கியிருந்தார், ஆனால் அவரே மத நிகழ்ச்சியில் பலருடன் கலந்து கொண்டுள்ளார், உ.பி.யில் செவ்வாய் வரை 37 பேருக்கு கரோனா பீடித்துள்ளது.

மேலும் ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரத்திற்கு ராமர் கோயில் கட்ட ரூ.11 கோடி நிதிக்கான காசோலையை வழங்கினார். பல குருக்கள் முன்னிலையில் யோகி ஆதித்யநாத்தும் மந்திரங்களைக் கூறிய வீடியோவை அரசு செய்தி தொடர்பாளர் பகிர்ந்து கொண்டார்.

இந்தச் சடங்கை ட்விட்டரில் பகிர்ந்த யோகி ஆதித்யநாத், “மகா ராமர் கோயில் கட்டும் பணியின் முதற்கட்டம் நிறைவடைந்துள்ளது. மரியாதை புருஷோத்தமன் தார்ப்பாலின் டென்ட்டிலிருந்து புதிய பீடத்துக்குச் சென்றுள்ளார்” என்று ட்வீட் செய்துள்ளார்.

SCROLL FOR NEXT