பிரதமர் மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்: கோப்புப்படம் 
இந்தியா

பிரதமர் மோடியின் லாக்-டவுன் முடிவுக்கு காங்கிரஸ் ஆதரவு: ஏழை மக்கள், தொழிலாளர்களுக்கு திட்டங்கள் தேவை என வலியுறுத்தல்

பிடிஐ

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நாடுமுழுவதும் 21-நாட்கள் லாக்-டவுன் செய்யப்படும் எனப் பிரதமர் மோடி நேற்று அறிவித்த முடிவுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவும், வரவேற்பும் தெரிவித்துள்ளது.

அதேசமயம், சமூதத்தில் விளிம்பு நிலையில் இருக்கும் தொழிலாளர்கள், ஏழை மக்கள், கூலித்தொழிலாளர்கள் நலனுக்கு திட்டங்களை, நிதியுதவியை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

கரோனா வைரஸ் பரவும் வேகம் இந்தியாவில் அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா வைரஸுக்கு 500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், 11-பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கரோனா வைரஸ் பரவும் தீவிரத்தை அறிந்த பிரதமர் மோடி, நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதில் “ அடுத்த 21 நாட்களுக்கு நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இதற்கு மக்கள் அனைவரும் ஆதரவு அளி்க்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்திருந்தார்

பிரதமர் மோடியின் இந்த வேண்டுகோளுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவும்,வரவேற்பும் அளித்துள்ளது. அந்த கட்சியின் மூத்ததலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ எந்த விதமான சிரமங்கள் இருந்போதிலும், பிரதமர் மோடியின் முடிவை ஆதரித்து, கட்டுப்பாடுகளை பின்பற்றுவதுதான் அனைத்துக் குடிமக்களின் கடமை. பிரதமர் மோடியின் உரையை மிகவும் கவனமாகக் கேட்டேன். அவரின் பேச்சில் மக்கள் மீதான அக்கறை, உணர்ச்சி, அழுத்தம், கவலை, அச்சம் போன்ற அனைத்து உணர்வுகளும் கலந்திருந்தது.

அதேசமயம், சமூகத்தில் உள்ள விளிம்புநிலையில் இருக்கும் ஏழைகள், தினக்கூலிகள், வேளாண் தொழிலாளர்கள், சுயதொழில் செய்வோர் ஆகியோருக்கு நிதியுதவி அளிக்கும் திட்டங்களை மத்திய அரசு அறிவிக்க வேண்டும். நிதித்திட்டங்களை அறிவித்துவிட்டால் மற்ற துறைகளில் இருக்கும் சிக்கல்களும் தெரி்ந்துவிடும், அதையும் நாம் அடையாளம் கண்டு தீர்க்க முடியும்” எனத் தெரிவித்தார்

ரன்தீப் சுர்ஜேவாலா

காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டு பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பினார். அதில், “ கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும், தடுக்கும் வகையில் 21 நாட்கள் ஊரடங்கை அரசு பிறப்பித்துள்ளது. இந்த சூழலி்ல அனைத்து ஏழைமக்கள், விளிம்பு நிலை மக்கள், ஒய்வூதியதார்கள் ஆகியோருக்கு உடனடியாக ரூ.7500 நிதியுதவி அளிக்க வேண்டும்.

முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டதுபோல் மக்களுக்கு குறைந்தபட்ச வருமானம் உறுதியளிக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், இ்ந்த நேரத்தில் இது மிகவும் அவசியமானது என்பதால் உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

கரோனா வைரஸுக்கு எதிராக நாடு போராடும், தோற்கடிக்கும், ஆனால் இது தலைமைப்பதவிக்கான மிக்கடுமையான சோதனைக்காலம், ஆனால் உங்கள் அரசு அதை ஏற்கத் தயராக இல்லை. அறுவடை நேரம் நெருங்குவதால், விவசாயிகளுக்கு உடனடியாக கடன் தள்ளுபடி அறிவிக்க வேண்டும்

இந்த கரோனா வைரைஸத் தடுக்க என்ன நடவடிக்ைக எடுத்துள்ளீரகள். மருத்துவப் பணியில் ஈடுபடும் மருத்துவர்கள், ஊழியர்கள், சுகாதாரப்பணியாளர்களுக்கு என்ன உயிர்பாதுகாப்பு இருக்கிறது. ஊரடங்கு உத்தரவின்போது ஏற்படும் உணவுச்சிக்கலை தீர்க்க போதுமான அளவு திட்டம் இருக்கிறதா. இந்த ஊரடங்கில் சாதாராண எளிய மக்கள் என்ன செய்யப்போகிறார்கள்” எனத் ெதரிவித்துள்ளார்

SCROLL FOR NEXT