இந்தியா

4-வது முறையாக நிலம் கையகப்படுத்துதல் அவசர சட்டம்

செய்திப்பிரிவு

நான்காவது முறையாக நிலம் கையகப்படுத்துதல் அவசர சட்டத்தைப் பிறப்பிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நிலம் கையகப்படுத்தும் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் கடந்த மார்ச் மாதம் நிறைவேற் றப்பட்டது. ஆனால் மாநிலங்க ளவையில் பெரும்பான்மை பலம் இல்லாததால் பல மாதங்களாக மசோதா முடங்கியுள்ளது. இதை யடுத்து நிலம் கையகப்படுத் தும் அவசர சட்டத்தை அடுத் தடுத்து மூன்று முறை மத்திய அரசு அமல்படுத்தியது.

கடந்த மழைக்கால கூட்டத் தொடரின்போது மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் வியாபம், லலித் மோடி விவகாரங்களால் மழைக்கால கூட்டத்தொடர் முழுவதையும் எதிர்க்கட்சிகள் முடக்கின.

இந்நிலையில் தற்போது அமலில் உள்ள நிலம் கையகப் படுத்தும் அவசர சட்டத்தின் கால அவகாசம் வரும் 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது. எனவே மீண்டும் அவசர சட்டத்தை பிறப்பிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறியபோது, அவசர சட்டத்தை பிறப்பிக்காவிட்டால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்று தெரிவித்தார்.

தற்போது நிலம் கையகப் படுத்தும் சட்டத் திருத்த மசோதா எஸ்.எஸ். அலுவாலியா தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனையில் உள்ளது. இந்தக் குழு வரும் குளிர்கால கூட்டத்தொடரில் தனது அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது.

SCROLL FOR NEXT