நாடாளுமன்ற கட்டடத்தின் 3வது மாடியில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
புது டெல்லியில் நாடாளுமன்ற கட்டடத்தின் 3வது மாடியில் இன்று காலை 8.50 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் 7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து, தீயை அணைக்கும் பணி துரிதமாக நடைபெற்றது.
வளாகத்தில் இருந்த குளிர் சாதனப் பெட்டியிலிருந்து கசிவின் காரணமாக ஏற்பட்ட சிறிய தீ விபத்துதான் இது என்றும், இதனால் பெரும் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.