இத்தாலியின் ரோம் நகரில் இருந்து அண்மையில் இந்தியர்களை மீட்டு வந்த‘ஏர் இந்தியா’ குழு. 
இந்தியா

கரோனா வைரஸுக்கு எதிரான போர்- ‘ஏர் இந்தியா’ குழுவுக்கு பிரதமர் பாராட்டு

செய்திப்பிரிவு

சீனாவின் வூகான் நகரில் ஏற்பட்ட கரோனா வைரஸ் பாதிப்பு பிற நாடுகளுக்கும் பரவியுள்ளது. இந்நிலையில் வூகான் உள்ளிட்ட சீன நகரங்களில் சிக்கித் தவித்த இந்தியர்களை, குறிப்பாக மாணவர்களை மீட்க ‘ஏர் இந்தியா’ சார்பில் சிறப்பு விமானம் அனுப்பப்பட்டது. இதுபோல் ஜப்பான், இத்தாலி மற்றும் ஈரானுக்கும் ‘ஏர் இந்தியா’ விமானம் அனுப்பி வைக்கப்பட்டது. இதன் மூலம் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து மீட்கப்பட்டனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி நேற்று தனது ட்விட்டர் பதிவில், “மனிதநேய பணிக்கான அழைப்பை ஏற்றுக்கொண்டு மிகுந்த தைரியம் காட்டி இந்தியர்களை மீட்டு வந்த ஏர் இந்தியா குழுவால் மிகவும் பெருமிதம் கொள்கிறேன். அவர்களின் சிறந்த முயற்சிகள், நாடு முழுவதும் பலரால் போற்றப்படுகிறது” என்று கூறியுள்ளார். வெளிநாடுகளுக்கு மீட்புப் பணிக்காக சென்று வந்த ஏர் இந்தியா பணியாளர்கள் பல இடங்களில் அருகில் வசிப்பவர்களால் புறக்கணிப்புக்கு ஆளாவதாக ஏர் இந்தியா நேற்று முன்தினம் வருத்தம் தெரிவித்தது. இந்நிலையில் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT