கரோனா வைரஸ் பாதிப்பினால் கை சுத்திகரிப்பானின் தேவைகள் எகிறியதையடுத்து அதன் விலையும் எகிறி வருகிறது, இதனையடுத்து ஜூன் மாதம் 30ம் தேதி வரை 200மிலி கொண்ட கைசுத்திகரிப்பான் விலை அதிகபட்சம் ரூ.100க்குத்தான் விற்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஈரடுக்கு முகக்கவசத்தின் அதிகபட்ச விலையை ரூ.8 ஆகவும், மூவடுக்கு முகக்கவச விலையை ரூ.10 என்றும் அரசு நிர்ணயித்துள்ளது, இதனை நுகர்வோர் விவகார அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் இன்று அறிவித்தார்.
சானிடைசர்ஸ், முகக்கவசங்கள் அத்தியாவசியப் பொருட்களில் சேர்க்கப்பட்டதால் அதனை பதுக்குவது, விலையை திரிப்பது சட்ட விரோதமாகும்.
மார்ச் 19ம் தேதி கை சுத்திகரிப்பானில் பயன்படுத்தப்படும் ஆல்கஹால் விலைக்கும் அரசு உச்ச வரம்பு விதித்தது.
இந்நிலையில் கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 293 ஆகவும், தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 266ஆகவும் உள்ளது.