இந்தியா

அமெரிக்காவிலிருந்து திரும்பிய தெலங்கானா எம்.எல்.ஏ. எச்சரிக்கையையும் மீறி நிகழ்ச்சிகளில் பங்கேற்பு: மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ்

செய்திப்பிரிவு

ஆளும் தெலங்கானா கட்சியின் எம்.எல்.எ. கொனேரு கொனப்பா என்ற சட்டமன்ற உறுப்பினர் அமெரிக்காவிலிருந்து திரும்பியுள்ளார், கரோனா தொற்று நாட்டிலிருந்து வந்திருப்பதால் அவர் தன்னை 14 நாட்களுக்குத் தனிமைப் படுத்திக் கொள்ள வேண்டும் ஆனால் அவர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவதையடுத்து கரோனா தொற்று எச்சரிக்கைகளை மீறியதாக மாவட்ட ஆட்சியர் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இவர் அமெரிக்காவிலிருந்து திரும்பிய பிறகு வீட்டுத் தனிமையில் இருந்தார், ஆனால் திடீரென ரயிலில் சென்று சமூக, அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்றதையடுத்து அங்கு பீதி பரவியுள்ளது.

சுமார் 3000 பேர் பங்கு பெறும் சமூக நிகழ்ச்சிகளில், கோயில் நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்பது அங்கு சர்ச்சையாகியுள்ளது. நாடே கரோனா நெருக்கடியில் தத்தளித்து வரும் நிலையில் இவ்வாறு ஒரு எம்.எல்.ஏ. பொறுப்பின்றி செயல்படுவதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

சிர்பூர்-ககஸ்நகர் அரசியல்வாதியான இவரும் இவரது மனைவியும் அமெரிக்காவிலிருந்து செவ்வாயன்று திரும்பினர், ஆனால் இவர்களே சுய-அறிவிப்பு விண்ணப்பம் பூர்த்தி செய்து தனிமையில் இருப்பதாக உறுதி அளித்தனர். ஆனால் அவர் அடுத்த நாளே சொல்பேச்சை மீறி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

அனைத்தையும் விட அபாயகரமான செயலில் அவர் ஈடுபட்டார், தொண்டர்களுடன் கைகுலுக்கியுள்ளார்.

இதனையடுத்து அங்கு சர்ச்சைக் கிளம்பியுள்ளது.

SCROLL FOR NEXT