மக்களவைத் தேர்தலுக்கான முடிவுகளை அறிந்துகொள்ள மே 16-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளை அனைவரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.
இந்நிலையில், ஆந்திரப் பிரதேசத்தில் இன்று முதல் நக ராட்சி, மாநகராட்சி, ஊராட்சி, சட்ட மன்றம், மக்களவைத் தேர்தல் முடிவுகள் தொடர்ச்சியாக வெளி யாக உள்ளன.
ஆந்திர மாநிலத்தில் உள்ள தெலங்கானா, சீமாந்திரா ஆகிய பகுதிகள், வரும் ஜுன் 2-ம் தேதி முதல் இரு மாநிலங்களாக அதி காரப்பூர்வமாக உருவாகவுள்ளன. முன்னதாக மாநில பிரிவினை தொடர்பாக அரசியல் கட்சிகள் பல்வேறு நிலைப்பாடுகளை எடுத்தன. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட அரசியல் பிரகமுகர்கள் பலர் கட்சி மாறி தேர்தலை சந்தித் தனர். கூட்டணிகளில் மாற்றம் ஏற் பட்டது. அரசியல்வாதிகளின் கொள் கைகளும் மாறின.
மாநில பிரிவினை தெலங்கானா பகுதியில் மகிழ்ச்சியையும், சீமாந் திரா பகுதியில் எதிர்ப்பையும் ஏற்படுத்தியது. பிரிவினைக்கு ஆதரவா அல்லது எதிர்ப்பா என் பதை தங்களின் வாக்குகள் மூலம் வாக்காளர்கள் தெரிவித்திருப் பார்கள் என்பதால், அரசியல் நோக் கர்களும் தேர்தல் முடிவுகளை அலசி ஆராய காத்திருகின்றனர்.
மாநிலத்தில் கடந்த மார்ச் 30-ம் தேதி நகராட்சி (145) மற்றும் மாநகராட்சி (10) தேர்த லும், கடந்த ஏப்ரல் 6, 11 ஆகிய தேதிகளில் ஊராட்சித் தேர்த லும் நடைபெற்றன. இந்த தேர்தல் களுக்கான வாக்கு எண்ணிக் கையை உடனடியாக வெளியிட் டால், அவை சட்டமன்றம், மக்க ளவைத் தேர்தல்களில் எதிரொலிக் கும் என சில கட்சிகளின் வேட்பாளர் கள் கருதினர். எனவே, உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கையை தள்ளிவைக்கக் கோரினர்.
அதை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், உள்ளாட்சி அமைப்பு களுக்கான தேர்தல் முடிவுகளை சட்டமன்றம், மக்களவைத் தேர்தல் கள் நிறைவுபெற்ற பின்பு வெளி யிடலாம் என உத்தரவிட்டது.
மாநிலத்தில் கடந்த 7-ம் தேதி யுடன் சட்டமன்ற, மக்களவைத் தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்ததையடுத்து உள் ளாட்சித் தேர்தலின் வாக்கு எண் ணிக்கை இன்று நடைபெறவுள்ளது.
நகராட்சி, மாநகராட்சித் தேர்தல்களில் பதிவான வாக்குகள், இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு மதியத்திற்குள் முடிவுகள் அறிவிக்கப்பட உள் ளன. ஊராட்சித் தேர்தலில் பதி வான வாக்குகள் நாளை எண்ணப் பட உள்ளன. இறுதி யாக வரும் 16-ம் தேதி, சட்டமன்ற, மக்களவைத் தேர்த லுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும். அனைத்துத் தேர்தல் களின் முடிவுகளையும் அறிந்து கொள்ள அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்