இந்தியா

குஜராத் வன்முறை: முதல்வருடன் ராஜ்நாத் சிங் பேச்சு

பிடிஐ

குஜராத்தில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று முதல்வர் ஆனந்தி பென்னிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது அமைதியை கொண்டு வர தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று உறுதி அளித்தார்.

குஜராத் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் கொண்டு வர அகமதாபாத்தின் 9 போலீஸ் நிலை யங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு நேற்று அதி காலை 2 மணிக்கு பிறப்பிக்கப்பட் டது. மாநிலத்தில் பதற்றம் நீடிக்கும் நிலையில், ‘‘பொது மக்கள் அமைதி காக்க வேண்டும்’’ என்று முதல்வர் ஆனந்தி பென் படேல் வேண்டு கோள் விடுத்துள்ளார்.

SCROLL FOR NEXT