இந்தியா

பஞ்சாப் மாநிலத்தில் வீடு வீடாக கரோனா வைரஸ் சோதனை

செய்திப்பிரிவு

சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் அனந்தபூர் சாகிப் நகரில் அதிகாரிகள் வீடு வீடாக கரோனா வைரஸ் சோதனை செய்தனர்.

பஞ்சாப் மாநிலம் ரூப்நகர் மாவட்டத்தில் அனந்தபூர் சாகிப் நகர் உள்ளது. 10 நாட்களுக்கு முன் இங்கு நடந்த சீக்கிய மத விழாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 70 வயதான முதியவர் ஒருவர் கலந்து கொண்டார். பின்னர், காய்ச்சலால் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். மக்கள் கூடிய அந்த விழாவில் முதியவர் கலந்து கொண்டதால் நகரில் வேறு யாருக்காவது கரோனா வைரஸ் பரவியிருக்குமா என்று அனந்தபூர் சாகிப் நகரில் வீடு வீடாக அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். 52 குழுவினர் இதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் 2 அல்லது 3 நாட்களில் பணிகள் முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். நகரில் வாகனப் போக்குவரத்தும் நேற்று தடை செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT