திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வரும் 28-ம் தேதி வரலட்சுமி விரத பூஜை நடைபெற உள்ளது.
இது தொடர்பாக திருப்பதி தேவஸ்தான துணை நிர்வாக அதிகாரி பாஸ்கர் நேற்று அதிகாரி களுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது பாஸ்கர் கூறிய தாவது: வரலட்சுமி விரதத்துக்கு கோயில் முழுவதும் மின் விளக்கு அலங்காரம் செய்ய வேண்டும். மேலும் கோயிலுக்குள் மலர் அலங்காரங்கள் செய்வதும் அவசியம். பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளில் எந்தவித குறையும் இருக்கக் கூடாது. இந்த சிறப்பு பூஜைக்கு வரும் 25-ம் தேதி முதல் இக்கோயிலில் பக்தர்களுக்கு டிக்கெட் வழங்கப்படும். அடையாள அட்டை மூலம் வழங்கப்படும் இந்த டிக்கெட்களை பெற்ற பக்தர்கள் கலாச்சார உடையில் பங்கேற்க வேண்டும். வரலட்சுமி விரத நாளில் அபிஷேக அனந்தர தரிசனம், லட்சுமி பூஜை, கல்யாண உற்சவம், லட்ச குங்கும அர்ச்சனை ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு பாஸ்கர் தெரிவித்தார்.