தூக்குத் தண்டனை கைதி அக்‌ஷய் சிங்கின் மனைவி புனிதா தேவி. | ஏ.என்.ஐ. 
இந்தியா

நிர்பயா வழக்கு: கோர்ட் வாசலில் தன்னைத்தானே காலணியால் அடித்துக் கொண்டு மயங்கி விழுந்த குற்றவாளி அக்‌ஷய் சிங்கின் மனைவி

ஏஎன்ஐ

டெல்லி பாட்டியாலா ஹவுஸ் கோர்ட் வளாகத்தில் நிர்பயா வழக்குத் தூக்குத்தண்டனை கைதி அக்‌ஷய் சிங்கின் மனைவி புனிதா தேவி மயங்கி விழுந்தார்.

தன்னைத்தானே காலணியைக் கழற்றி அடித்துக் கொண்டு கோர்ட் வளாகத்தில் அவர் மயங்கி விழுந்தார்.

நிர்பயா தூக்குத் தண்டனை கைதிகளுக்கு நாளை காலை 5.30 மணிக்குள் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நிர்பயாவின் உயிரைப் பறித்த இந்த நால்வரும் தங்கள் உயிருக்குப் பயந்து நீதிமன்றங்களிடம் மாறி மாறி உயிர்ப்பிச்சை கேட்கும் விதமாக மாறி மாறி மனுக்களை மேற்கொண்டனர், இதில் கடைசி மனுமீதான உத்தரவை நீதிபதி தள்ளி வைத்ததையடுத்து குற்றவாளி அக்‌ஷய் சிங்கின் மனைவி கோர்ட் வாசலில் பெரிய நாடகம் ஒன்றை நிகழ்த்தினார்.

பிற்பாடு இவர்கள் மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து நாளை நால்வருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புனிதா தேவியும் தன் கணவன் போன பிறகு விதவையாக வாழ விரும்பவில்லை எனவே தனக்கு விவாகரத்து கோரி அவுரங்காபாத் குடும்ப நீதிமன்றத்தில் மனு செய்தார், இதுவும் தூக்குத் தண்டனை நிறைவேற்றத்தை தாமதப்படுத்தும் முயற்சியே என்று பலதரப்புகளிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்தன.

நிர்பயா பலாத்கார கொலைக் குற்றவாளியும் தூக்குத் தண்டனை கைதியுமான அக்‌ஷய் சிங்கிற்கும் புனிதா தேவிக்கும் மே 29, 2010-ல் ஜார்கண்ட் மாநிலம் பாலமு மாவட்டத்தில் திருமணம் நடந்தது, இவர்களுக்கு 9 வயதில் மகன் ஒருவர் இருக்கிறார்.

SCROLL FOR NEXT