பொது இடங்களில் கரோனா வைரஸ் பரவல் ஏற்படும் என்ற அச்சம் காரணமாக அவசர வழக்குளை மட்டுமே விசாரணை செய்ய உள்ளதாக பாட்னா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சீனாவில் உருவாகி சுமார் 6000 பேரை பலிகொண்டு உலகை அச்சுறுத்தத் தொடங்கியுள்ள கரோனா வைரஸ் தற்போது இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவில் இன்றுவரை 110 பேருக்கு கரோனா வைரஸ் உறுதியாகியுள்ள நிலையில் பல்வேறு மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முழுவீச்சில் முன்னெட்டு வருகின்றன.
பிஹார் தலைநகரான பாட்னா உயர்நீதிமன்றம், கரோனா வைரஸ் தொற்றுநோயை அடுத்து ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த மாத இறுதி வரை வழக்கமான ஜாமின் மற்றும் அவசர விஷயங்களை மட்டுமே விசாரிக்கப் போவதாக தெரிவித்துள்ளது.
தலைமை நீதிபதி சஞ்சய் கரோல் உயர்நீதிமன்ற நீதிபதிகள், மற்றும் வழக்கறிஞர்கள் சங்கங்களின் உறுப்பினர்கள் உட்பட அனைத்து தரப்பினருடனும் சந்திப்புகளை நடத்தியதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உயர் நீதிமன்றத்தின் மூன்று வழக்கறிஞர்கள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் யோகேஷ் சந்திர வர்மா கூறுகையில், "உயர்நீதிமன்றம் மிக அவசரமான விஷயங்களை மார்ச் 31 வரை மட்டுமே விசாரிக்கும்." என்று வர்மா கூறினார்.
முந்தைய நாள், கொல்கத்தா மற்றும் கவுகாத்தி உயர்நீதிமன்றங்களும் இதேபோன்ற அறிவிப்புகளை வெளியிட்டன.