கோப்புப் படம் 
இந்தியா

காய்ச்சலை எதிர்கொள்ள வீட்டிலேயே சிகிச்சை: ஆந்திராவில் ஆங்கிலேயர் கால சட்டம் அமல்

என்.மகேஷ்குமார்

கோவிட்-19 வைரஸ் காய்ச்சலை எதிர்கொள்ள ஆங்கிலேயர் கால சட்டத்தை ஆந்திர அரசு கையில் எடுத்துள்ளது. இதன்படி நோய் அறிகுறி உள்ளவர்களுக்கு வீட்டி லேயே சிகிச்சை அளிப்பது உட்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது.

இதுகுறித்து ஆந்திர மருத்துவத் துறை சிறப்பு முதன்மை ஆணையர்ஜவஹர் ரெட்டி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

1897-ல் வைரஸ் காய்ச்சல் பரவா மல் தடுக்க ‘எபிடமிக் டிசீசஸ் ஆக்ட்’ என்ற சட்டத்தை ஆங்கிலேய அரசு நிறைவேற்றியது. அதன்படி, ‘ஆந்திர பிரதேசம் தொற்றுநோய் கோவிட்-19 ஒழுங்குமுறைகள் 2020’ என்ற சட்டத்தை ஆந்திர அரசு தற்போது பிரகடனம் செய்துள்ளது. வெள்ளிக்கிழமை இரவு அமலுக்கு வந்த சட்டம் இன்னும் ஓராண்டுக்கு அமலில் இருக்கும்.

இந்த சட்டம் மாநில சுகாதார அமைச்சர் தலைமையில் செயல் படுத்தப்படும். சுகாதாரத் துறை முதன்மை செயலாளர், இயக்குநர் உள்ளிட்ட உயரதிகாரிகளின் மேற் பார்வையில், அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ அதிகாரி கள், மாவட்ட அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர்கள் இந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

வெளி ஆட்கள் சந்திக்க தடை

இதன்படி கோவிட்-19 காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களுக்கு போர்க் கால அடிப்படையில் சிகிச்சை அளிக்க வேண்டும். இதற்கு நோயாளி அல்லது உறவினர்கள் ஒத்துழைப்பு அளிக்காவிட்டால் நோயாளியை வீட்டிலேயே அடைத்து வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்படும். அவரை வெளி ஆட்கள் சந்திக்க 14 நாட்கள் தடை விதிக்கப்படும்.

இந்த சட்டத்தை மாவட்ட அள வில் அமல்படுத்த மாவட்ட ஆட்சி யருக்கு முழு அதிகாரம் அளிக்கப் பட்டுள்ளது. ஒரு ஊர் அல்லது பகுதியை தனிமைப் பகுதியாக அறிவித்து மற்றவர்கள் அங்கு செல்வதை தடுக்க முடியும். பள்ளி கள், திரையரங்குகள், வணிக வளா கங்கள், அலுவலங்களை மூடவும் மக்கள் ஒன்றுகூடவும் தடை விதிக்க முடியும். இதை மீறுவோர் மீது சட்டப்பட்டி நடவடிக்கை எடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

குணமடைந்த பொறியாளர்

தெலங்கானா மாநிலம், ஜகத்தி யாலா மாவட்டத்தை சேர்ந்த பொறி யாளர் ஒருவர் துபாயில் இருந்து திரும்பி வந்தபோது அவருக்கு காய்ச்சல் இருந்தது. செகந்திரா பாத், காந்தி அரசு மருத்துவமனை யில் சேர்க்கப்பட்ட அவருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலை யில் 12 நாள் தீவிர சிகிச்சைக்கு பிறகு அவர் முற்றிலும் குணம் அடைந்ததால் நேற்று காலை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். எனினும் அவரை 14 நாட்களுக்கு வெளியில் நடமாட வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் இத்தாலியிலி ருந்து நேற்று காலை ஹைதராபாத் வந்த ஒருவருக்கு காய்ச்சல் இருந்த தால் அவர் காந்தி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதற்கிடையே தெலுங்கு திரைப் பட தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் ஆந்திரா, தெலங்கானா அரசுகள் உத்தரவிட்டால் திரை யரங்குகளை உடனடியாக மூடுவது என திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்பட்டது.

SCROLL FOR NEXT