இந்தியா

நிலக்கரிச் சுரங்க ஊழல் வழக்கு: அமைச்சக முன்னாள் செயலர் ஓய்வு பெற்ற அதிகாரிக்கு ஜாமீன்

பிடிஐ

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலக்கரி அமைச்சகத்தின் முன்னாள் செயலர் எச்.சி.குப்தா மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரி எல்.எஸ்.ஜனோதி ஆகியோருக்கு நேற்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

மேலும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலக்கரி அமைச்சகத்தின் முன்னாள் மத்திய இணையமைச்சர் சந்தோஷ் பக்ரோடியாவுக்கு, அவரின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு, நேற்று ஒரு நாள் மட்டும், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

எனினும், அவர் அடுத்த விசாரணையின்போது நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறி, அவரது வழக்கை அடுத்த மாதம் 8ம் தேதிக்கு தள்ளி வைத்து, சிபிஐ சிறப்பு நீதி மன்றத்தின் நீதிபதி பரத் பராசர் உத்தரவிட்டுள்ளார்.

இவர்கள் மூவரும், ஏஎம்ஆர் அயர்ன் அண்ட் ஸ்டீல் எனும் தனியார் நிறுவனம், சட்டத்துக்குப் புறம்பாக நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டைப் பெறுவதற்கு உதவி புரிந்தனர் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது குறிப் பிடத்தக்கது.

SCROLL FOR NEXT