இந்தியா

சரத் பவாரின் சொத்து மதிப்பு: 6 ஆண்டுகளில் ரூ.60 லட்சம் அதிகரிப்பு

செய்திப்பிரிவு

மும்பை: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் சொத்து மதிப்பு 6 ஆண்டுகளில் ரூ.60 லட்ச ரூபாய் அதிகரித்து ரூ.32.73 கோடியாக உயர்ந்துள்ளது.

சரத் பவார் வரும் 26-ம் தேதி நடக்கும் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக நேற்று தனது வேட்பு மனுவை மும்பையில் தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்தார். 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் சரத்பவார் போட்டியிட்டபோது அவரது சொத்து மதிப்பு ரூ.32.13 கோடியாக இருந்தது.

இப்போது, 6 ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு ரூ.60 லட்சம் அதிகரித்துள்ளது. அவரது இப்போதைய சொத்து மதிப்பு ரூ.32.73 கோடி. இதை நேற்று வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் சரத் பவார் தெரிவித்துள்ளார். தனது மருமகன் அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார், பேரன் பார்த் பவார் ஆகியோரிடம் இருந்து பங்குகளை மாற்றுவதற்காக எதிராக முன்கூட்டிய வைப்புத் தொகைக்கு ரூ.1 கோடி கடன் பெற்றுள்ளதாகவும் பிரமாண பத்திரத்தில் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT