இந்தியா

‘‘இதற்கு பெயர் தான் தாய் வீடு திரும்புதல்’’ - ஜோதிராதித்ய சிந்தியா ராஜினாமா குறித்து அத்தை யசோதரா சிந்தியா கருத்து

செய்திப்பிரிவு

ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸில் இருந்து ராஜினாமா செய்தது குறித்து கருத்து தெரிவித்த பாஜக மூத்த தலைவரும் அவரது அத்தையுமான யேசோதரா சிந்தியா, இது தாய் வீடு திரும்புதல் என வர்ணித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் அடுத்தடுத்து அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. ஜோதிராதித்ய சிந்தியா ராஜினாமா கடிதத்தை சோனியா காந்திக்கு இன்று அனுப்பி வைத்தார்.

பின்னர் ஜோதிராதித்ய சந்தியா இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அப்போது உடன் இருந்தார். இதனால் அவர் பாஜகவில் இணையவுள்ளதாக தெரிகிறது. இதனால் ம.பி. காங்கிரஸ் அரசு ஆட்டம் காண வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து ஜோதிராதித்ய சிந்தியா தனது ராஜினாமா கடிதத்தை கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு இன்று அனுப்பி வைத்தார். ஜோதிராதித்ய சி்நதியாவின் ராஜினாமா கடிதத்தை அவரது உதவியாளர்கள் சோனியா காந்தியிடம் ஒப்படைத்தனர்.

இதனைத் தொடர்ந்து மத்திய பிரதேச மாநிலத்தைச் சேரந்த ஜோதிராதித்ய சிந்தியா ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.

இதுகுறித்து பாஜக மூத்த தலைவரும், ஜோதிராதித்ய சிந்தியாவின் அத்தையுமான யசோதரா சிந்தியா கூறியதாவது:
எனது உடன் பிறந்த சகோதரர் மாதவராவ் சிந்தியாவும் ஜனசங்கத்தில் இருந்து தான் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். ஆனால் இடையில் வழிதவறி காங்கிரஸில் சேர்ந்தார். மாதவராவ் சிந்தியாவின் மகன் ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸில் இருந்து விலகியுள்ளார். இது தான் தாய் வீடு திரும்புதல் போன்றது.’’ எனக் கூறினார்.

SCROLL FOR NEXT