இந்தியா

ம.பி.யை தொடர்ந்து ராஜஸ்தான்?

செய்திப்பிரிவு

மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் உச்ச பட்சத்தை எட்டி அரசுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ள நிலையில் ராஜஸ்தானிலும் இதுபோன்ற சூழல் உள்ளது.

மத்திய பிரதேசத்தில் அடுத்தடுத்து அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. ஜோதிராதித்ய சிந்தியா ராஜினாமா கடிதத்தை சோனியா காந்திக்கு இன்று அனுப்பி வைத்தார்.

பின்னர் ஜோதிராதித்ய சந்தியா இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அப்போது உடன் இருந்தார். இதனால் அவர் பாஜகவில் இணையவுள்ளதாக தெரிகிறது. இதனால் ம.பி. காங்கிரஸ் அரசு ஆட்டம் காண வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து ஜோதிராதித்ய சிந்தியா தனது ராஜினாமா கடிதத்தை கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு இன்று அனுப்பி வைத்தார். ஜோதிராதித்ய சி்நதியாவின் ராஜினாமா கடிதத்தை அவரது உதவியாளர்கள் சோனியா காந்தியிடம் ஒப்படைத்தனர்.

இதனைத் தொடர்ந்து மத்திய பிரதேச மாநிலத்தைச் சேரந்த ஜோதிராதித்ய சிந்தியா ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.

இந்தநிலையில் ராஜஸ்தானிலும் இதேபோன்று உட்கட்சி பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது.

முதல்வர் அசோக் கெலோட்டுக்கும், துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது. மாநிலங்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் காங்கிரஸ் சார்பில் வைர வியாபாரி ஒருவரை வேட்பாளராக முதல்வர் கெலோட் பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு சச்சின் பைலட் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கட்சி நிர்வாகிக்கு மட்டுமே மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்க வேண்டும் என அவர் கட்சித் தலைமையை வலியுறுத்தியுள்ளார். இதுமட்டுமின்றி கட்சியிலும், ஆட்சியிலும் இருவருக்கும் பெரும் கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன.

அம்மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து மாறியவர்களை சேர்த்து தான் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. 200 எம்எல்ஏக்களை கொண்ட சட்டப்பேரவையில் சிபிஎம், ராஷ்ட்ரீய லோக்தளம் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆளும் கூட்டணிக்கு 112 பேர் ஆதரவு உள்ளது. பாஜகவுக்கு 80 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. மத்திய பிரதேசதத்தை போலவே ராஜஸ்தானிலும் 20 எம்எல்ஏக்கள் ஆட்சி அதிகாரத்தை நிர்ணயிக்கும் சக்தியாக உள்ளனர்.

SCROLL FOR NEXT