இந்தியா

ஆர்.எஸ்.எஸ். தலைமைச் செயலகத்தைப் புகைப்படம்:  இருவரைப் பிடித்து  போலீஸார் தருவித் துருவி விசாரணை

செய்திப்பிரிவு

நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமைச் செயலகத்தை புகைப்படம் எடுக்கவும் அதன் அருகில் செல்ஃபி எடுக்கும் தேவையற்ற ஆர்வத்தினால் ஆசையினால் பெங்களூருவைச் சேர்ந்த இரண்டு நபர்கள் போலீஸ் விசாரணையில் 24 மணி நேரம் இருக்க நேரிட்டுள்ளது.

நிக்கி நிர்விகல்பா, ஃபலா ஃபைசல் என்ற இருவர் ராய்ப்பூர் சர்வதேசக் குறும்பட விழாவில் நடுவர்களாகச் செயல்பட அழைக்கப்பட்டனர். பெங்களூருவுக்கு வருவதற்கு முன்னால் நாக்பூரில் சிறிது நேரத்தைச் செலவிடலாம் என்று தோன்ற, அதுவும் ஆர்.எஸ்.எஸ். தலைமைச் செயலகத்தைப் பார்க்கலாம் என்றும் தோன்ற அது அவர்களுக்கு பெரும் சோதனையாக அமைந்தது.

ஆங்கில தனியார் ஊடகம் ஒன்றிற்கு நிக்கி நிர்விகல்பா இது தொடர்பாகக் கூறும்போது, “நாக்பூரில் இருந்தோம் எனவே சில மணி நேரங்கல் இந்த ஊரைச் சுற்றிபார்க்கலாம் என்று நினைத்தோம். அப்போதுதான் எதேச்சையாக ஆர்.எஸ்.எஸ். தலைமைச் செயலகத்தைப் பார்த்தோம், இதுவரை பார்த்ததில்லை. எனவே புகைப்படம் எடுக்கலாம் என்று நினைத்தோம்.” என்றார்.

ஆனால் கோட்வாலி போலீஸார் உடனடியாக வந்து இருவரையும் நிலையத்துக்கு இட்டுச் சென்றனர் என்றார்.

விடுவிக்கப்பட்ட பிறகு நடந்ததை விவரித்த நிக்கி நிர்விகல்பா, “அங்கு சுமார் 30 போலீஸார், இதில் பயங்கரவாத தடுப்புப் போலீசார்களும் இருந்தனர். ஐபி புலனாய்வு அமைப்பும் எங்களை விசாரித்தது” என்றார்.

மார்ச் 5ம் தேதி மாலை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட இவர்கள் சுமார் 24 மணி நேரம் கழித்து விடுவிக்கப்பட்டதாக போலீஸ் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.

ஒருசாதாரணம் புகைப்படம் எடுக்கும் செயலுக்கு இத்தகைய கடும் விளைவுகளை தான் எதிர்பார்க்கவில்லை என்று நிக்கி நிர்விகக்பா தெரிவித்தார்.

ஆனால் 2006-ல் ஆர்.எஸ்.எஸ். தலைமைச் செயலகத்தின் மீது தீவிரவாதத் தாக்குதல் சதி நடந்ததாகக் கூறப்பட்டதையடுத்து அப்பகுதி பதற்றமான பகுதியாகக் கருதப்பட்டு அங்கு புகைப்படங்கள் எடுப்பதற்கு கட்டுப்பாடுகள் இருப்பது இவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

SCROLL FOR NEXT