இந்தியா

கேரளாவில் கரோனா வைரஸ் தனிமைச் சிகிச்சைப் பிரிவிலிருந்து தப்பித்தவர் மீண்டும் அழைத்து வரப்பட்டார்

பிடிஐ

கேரளா பத்தனம்திட்டாவில் கரோனா வைரஸ் சந்தேகத்தின் அடிப்படையில் தனிமைப்பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த நபர் மருத்துவமனையிலிருந்துத் தப்பிச் சென்றார், அவரை மீண்டும் மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்து வந்து விட்டதாக கேரளாவின்பத்தனம்திட்டா மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

இத்தாலியிலிருந்து திரும்பிய 3 உறுப்பினர்கள் குடும்பத்தினரைச் சந்தித்திருந்தார் இந்த நபர், அந்த மூவருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதியான நிலையில் அவர்களை சந்தித்த இவரையும் சோதனை செயய் மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர்.

இந்நிலையில்தான் அவர் மருத்துவமனையிலிருந்து தப்பி சென்றார். கரோனா தொற்று இருந்து இவர் தப்பிச் சென்று மக்களுடன் கலந்தால் அது பெரிய அச்சுறுத்தலாகும் என்று மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுவரை 6 பேருக்கு கரோனா தொற்று கேரளாவில் உறுதி செய்யப்பட்ட நிலையில் மருத்துவத் துறையின் வழிகாட்டுதல்களை தயவு கூர்ந்து பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று கேரள அரசு கேட்டுக் கொண்டுள்ளது

சுகாதார அமைச்சர் கேகே.ஷைலஜா எச்சரிக்கை விடுத்த போது, கோவிட்-19 பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து கேரளா வருபவர்கள் தங்கள் வருகையை அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தி முறையான சோதனைகள் மேற்கொள்ள வேண்டும் இல்லையேல் அவர்கள் மீது சுகாதாரச் சட்டம் பாயும் என்றார்.

SCROLL FOR NEXT