புணே: அடுத்த ஆண்டு ஜனவரி முதல் சானிட்டரி நாப்கின்களுடன் மக்கக்கூடிய பைகள் வழங்குவது கட்டாயமாக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மகாராஷ்டிராவின் புனே நகரில் நேற்று நடைபெற்ற விழாவில் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: சானிட்டரி நாப்கின்களுடன் மக்கக்கூடிய பைகள் வழங்கும்படி தயாரிப்பு நிறுவனங்களிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் தயாரிப்பு நிறுவனங்கள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அடுத்த ஆண்டு ஜனவரி முதல் சானிட்டரி நாப்கின்களுடன் மக்கக்கூடிய பைகள் வழங்குவது கட்டாயமாக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.