இந்தியா

கழிப்பறை காகிதங்களுக்கு தட்டுப்பாடு: செய்தி அச்சிடாமல் 8 பக்கம் வெளியிட்ட ஆஸி. பத்திரிகை

செய்திப்பிரிவு

ஆஸ்திரேலியாவில் கரோனா வைரஸ் பயத்தால், கழிப்பறை காகிதங்களை பொதுமக்கள் மொத்தமாக வாங்கி குவித்துஉள்ளனர்.

இதனால் கடைகள், மால்களில் கழிப்பறைகளில் பயன்படுத்தும் ‘டிஷ்யூ பேப்பர்’ சுத்தமாக இல்லை. அனைத்தும் விற்பனையாகி விட்டதால், ஆஸ்திரேலியாவில் கழிப்பறை காகிதங்களுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் இருந்து வெளிவரும் ‘என்டி நியூஸ்’ என்ற பத்திரிகை தனது இதழுடன் சில நாட்களுக்கு முன்னர் 8 பக்கங்களைக் கூடுதலாக சேர்த்து செய்திகள் எதுவும்அச்சிடாமல் வெறும் வெள்ளையாகவே வெளியிட்டது. இதற்கான காரணத்தையும் தனது முதல் பக்கத்தில் என்டி நியூஸ் கூறியிருந்தது.

அதில், ‘‘பத்திரிகையின் உள்ளே8 வெறும் பக்கங்களை இணைத்துள்ளோம். அவற்றை நீங்கள் எளிதில் உருவி எடுத்து கிழித்தெடுத்து அவசரத்துக்கு கழிப்பறை காகிதமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்’’ என்று கூறியிருந்தது. இது சமூக வலைதளத்தில் வைரலானது.

SCROLL FOR NEXT