இந்தியாவில் 56 தேசிய, மாநில கட்சிகள் உட்பட மொத்தம் 1,866 அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது:
கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கடந்த ஜூலை வரை 239 அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணை யத்தில் புதிதாக பதிவு செய்யப் பட்டன. அவற்றையும் சேர்த்து இது வரை இந்தியாவில் 1,866 அரசியல் கட்சிகள் பதிவு செய்துள்ளன. இவற்றில் 56 கட்சிகள் மட்டும்தான் தேசிய அல்லது மாநில கட்சிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
கடந்த 2014-ம் ஆண்டு நடை பெற்ற நாடாளுமன்ற தேர்தலில், 464 கட்சிகள் மட்டுமே தங்கள் சார்பில் வேட்பாளர்களை போட்டி யிட செய்தன. கடந்த 2010 மார்ச் மாதம் 10-ம் தேதி வரை 1,593 அரசியல் கட்சிகள்தான் இருந்தன.
ஆனால், மார்ச் 11-ம் தேதியில் இருந்து மார்ச் 21-ம் தேதிக்குள், அதாவது 10 நாட்களில் 24 புதிய அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்தன. மார்ச் 26-ம் தேதி மேலும் 10 புதிய கட்சிகள் பதிவு செய்யப்பட்டன.
இவை எல்லாம் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியான மார்ச் 5-ம் தேதிக்கு பிறகு பதிவு செய்து கொண்ட கட்சிகள்.
இதன் மூலம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முடியும்போது அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 1,627 ஆக உயர்ந்தது. கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாத இறுதியிலிருந்து கடந்த ஜூலை மாதம் வரையில் மேலும் 239 அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து கொண்டன.
இந்தக் கட்சிகள் பதிவு செய்திருந்தாலும், அங்கீகரிக்கப் படாத கட்சிகள். இந்த கட்சிகள் தேர்தலில் சொந்தமான சின்னத் துடன் போட்டியிட முடியாதவை. தேர்தல் ஆணைய குழு தேர்வு செய்துள்ள சின்னங்களில் இருந்து ஒன்றை தேர்ந்தெடுத்து அந்த சின்னத்தில்தான் போட்டியிட முடியும். தற்போதைக்கு இலவச சின்னங்களில் ஏசி, அலமாரி, பலூன், செருப்பு, தேங்காய், ஜன்னல், ஜமுக்காளம், பாட்டில், ரொட்டி போன்ற 84 சின்னங்கள் உள்ளன.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிக்கான அந்தஸ்து பெற வேண்டுமானால், மாநில அளவில் அல்லது தேசிய அளவில் குறிப் பிட்ட சில அம்சங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
இந்தக் கட்சிகள் பதிவு செய்திருந்தாலும், அங்கீகரிக்கப்படாதவை. இந்த கட்சிகள் தேர்தலில் சொந்தமான சின்னத்துடன் போட்டியிட முடியாது. தேர்தல் ஆணைய குழு தேர்வு செய்துள்ள சின்னங்களில் இருந்து ஒன்றை தேர்ந்தெடுத்து அந்த சின்னத்தில்தான் போட்டியிட முடியும்.