இந்தியா

ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கடல் உணவுகளில் இருந்து கோவிட்-19 வைரஸ் பரவாது: உணவுப் பாதுகாப்பு தர ஆணையம் தகவல்

செய்திப்பிரிவு

ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி மற்றும்கடல் உணவுகளில் இருந்து கோவிட்-19 காய்ச்சல் பரவாது, நாட்டில் வெப்பநிலை அதிரிக்கும்போது, இந்த காய்ச்சலுக்கான வைரஸ் ஒழிந்துவிடும் என்று இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (எப்எஸ்எஸ்ஏஐ) தலைவர் ஜி.எஸ்.ஜி. ஐயங்கார் கூறினார்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இது தொடர்பாக ஜி.எஸ்.ஜி. ஐயங்கார் பேசியதாவது:

ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி மற்றும் கடல் உணவுகளில் இருந்து கோவிட்-19 காய்ச்சல் பரவும் என்பது தவறாக கருத்தாகும். இதற்கு அறிவியல்பூர்வ ஆதாரம்எதுவும் இல்லை. கோவிட்-19 காய்ச்சலுக்கு காரணமாக கரோனா வைரஸ், விலங்குகளில் காணப்படும் ஒரு வைரஸ் ஆகும்.

இது எவ்வாறு பரவியது என்பதை கண்டறியும் பணியை நாம்விஞ்ஞானிகளிடம் விட்டுவிடுவோம்.

நமது நாடு வெப்ப மண்டல நாடாகும். நாட்டில் வெப்ப நிலை 35-36 டிகிரி செல்சியஸ் வரை உயரும்போது எந்த வைரஸும் உயிர்வாழ முடியாது. எனவே குளிர்காலம் முடிந்து வெப்பநிலை உயர வேண்டும் என கடவுளிடம் வேண்டிக்கொள்வோம்.

முன்னெச்சரிக்கை அவசியம்

இதற்கு முன் பறவைக் காய்ச்சல் மற்றும் எபோலா வைரஸ் தாக்குதலை நாம் சிறப்பாக கையாண்டுள்ளோம். கோவிட்-19 காய்ச்சலையும் நாம் கையாளமுடியும். என்றாலும் அதற்குசிறிது காலம் பிடிக்கும். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.

கோவிட்-19 வைரஸை தனிமைப்படுத்த அரசு அனைத்துமுயற்சிகளும் மேற்கொண்டுள்ளது. இந்த வைரஸை தனிமைப்படுத்திவிட்டால் சிறிது காலத்தில் அதற்கு மருந்து அல்லது எதிர் வைரஸ் கண்டுபிடித்து விடலாம்.

இவ்வாறு ஜி.எஸ்.ஜி. ஐயங்கார் கூறினார்.- பிடிஐ

SCROLL FOR NEXT