பாரத் மாதா கி ஜெய் கோஷம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியதற்கு பிரதமர் மோடி மன்மோகன் பெயரைக் குறிப்பிடாமல் சூசகமாக பதிலடி கொடுத்துள்ளார்.
இன்று பாஜக எம்.பி.க்களிடம் பேசிய பிரதமர் மோடி, “சிலர் பாரத் மாதா கி ஜெய் கோஷத்தை அசவுகரியமாக உணர்கிறார்கள்” என்று காங்கிரஸ் கட்சியினர் இந்த கோஷத்தை மேற்கொள்ள வெட்கப்படுகின்றனர் என்ற பாஜகவில் சிலர் விமர்சிப்பதை அங்கீகரிக்கும் விதமாக பிரதமர் மோடி, மன்மோகன் சிங்குக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.
கடந்த வாரம் ஜவஹர்லால் நேருவின் உரைகள், கட்டுரைகள், கடிதங்கள் அடங்கிய தொகுப்பு நூலான “ஹூ இஸ் பாரத் மாதா?” என்ற நூலின் அறிமுக விழாவில் மன்மோகன் சிங், நேருவை மேற்கோள் காட்டி கூறும்போது, “இந்த பாரத மாதா யார்? யாருடைய வெற்றியை விரும்புகிறீர்கள்?” என்று பேசினார்.
மன்மோகன் சிங் இதில் பேசும்போது மேலும் கூறிய போது பாரத மாதா கி ஜெய் என்ற கோஷம் தவறாகப் பயன்படுத்தப்பட்டு இந்தியா பற்றிய உணர்ச்சிமயமான ஒரு கருத்தை கட்டமைக்கப்பட பயன்பட்டு வருகிறது, இது பல இந்தியக் குடிமக்களை புறந்தள்ளுகிறது என்று குறிப்பிட்டார்.
மன்மோகன் சிங்கின் இந்தக் கருத்துக்குத்தான் மோடி பதிலடி கொடுத்துள்ளார்.
2 ஆண்டுகளுக்கு முன்பாக அமித் ஷாவும் காங்கிரஸ் கட்சியினர் பாரத் மாதா கி ஜெய் கோஷம் குறித்து அசவுகரியப்படுவதாகக் குற்றம் சாட்டியதும் நினைவுகூரத்தக்கது.